23 சிக்ஸ்.. பென் ஸ்டோக்ஸை முந்திய ரிஷப் பண்ட்.. வெளிநாட்டு மண்ணில் மாபெரும் உலக சாதனை

Rishabh Pant
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரில் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. அந்தத் தொடர்ந்து இரண்டாவது போட்டி பர்மிங்காம் நகரில் ஜூலை இரண்டாம் தேதி துவங்கியது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா அபாரமாக பேட்டரி செய்து 587 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 269, ரவீந்திர ஜடேஜா 89, ஜெய்ஸ்வால் 87, வாசிங்டன் சுந்தர் 42 ரன்கள் குவித்தார்கள். இங்கிலாந்து அணிக்கு அதிகபட்சமாக சோயப் பஷீர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து மிகவும் போராடியும் 407 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்த அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் 184*, ஹாரி ப்ரூக் 158 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

வலுவான நிலையில் இந்தியா:

இந்திய அணிக்கு முகமது சிராஜ் 6, ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தனர். அடுத்ததாக 180 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாட முயற்சித்து 28 (22) ரன்னில் அவுட்டானார். மறுபுறம் கேஎல் ராகுல் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் வந்த கருண் நாயர் 26 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார்.

அடுத்து வந்த கேப்டன் கில் நிதானமாக விளையாடி நிலையில் எதிர்ப்புறம் அரை சதத்தை கடந்த ராகுல் 55 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். ஆனால் அடுத்ததாக வந்த ரிஷப் பண்ட் தம்முடைய ஸ்டைலில் அதிரடியாக விளையாடினார். சில பந்துகளை காட்டுத்தனமாக அடித்த அவர் ஒரு தருணத்தில் பேட்டை கையிலிருந்து காற்றில் பறக்க விட்டது ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தியது.

- Advertisement -

ரிஷப் பண்ட் உலக சாதனை:

அவருடைய நல்ல ஆட்டத்தால் 4வது நாள் உணவு இடைவெளியில் இந்தியா 177/3 ரன்கள் குவித்து 355 ரன்களை முன்னிலையாக பெற்று வலுவான நிலையில் இருக்கிறது. களத்தில் ரிஷப் பண்ட் 41* (35), கேப்டன் கில் 24* ரன்களுடன் உள்ளனர். இப்போட்டியில் இதுவரை ரிஷப் பண்ட் 5 பவுண்டரி 3 சிக்ஸர்களை பறக்க விட்டுள்ளார்.

இதையும் படிங்க: எவ்ளோ பெரிய டார்கெட்டா இருந்தாலும் சரி.. எங்க வேலை இதுமட்டும் தான் – சவால் விட்ட ஹாரி ப்ரூக்

இதையும் சேர்த்து இங்கிலாந்து மண்ணில் மட்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 23 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பென் ஸ்டோக்ஸ் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரிஷப் பண்ட் (இந்தியா): 23*, இங்கிலாந்தில்
2. பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து): 21, தென் ஆப்பிரிக்காவில்
3. மேத்தியூ ஹைடன் (ஆஸ்திரேலியா): 19, இந்தியாவில்

Advertisement