9 சிக்ஸ் 4 சதம்.. இங்கிலாந்து மண்ணின் ஜாம்பவானாக ரிஷப் பண்ட் 2 ஆல் டைம் உலக சாதனை சமன்

- Advertisement -

இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் விளையாடி வருகிறது. ஜூன் 20ஆம் தேதி துவங்கிய முதல் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 471 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 101, ரிசப் பண்ட் 134, கேப்டன் 147 ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.

இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4, ஜோஸ் டாங் 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்தை 465 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 6 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணி 364 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 137, ரிஷப் பண்ட் 118 ரன்களை எடுத்தார்கள்.

- Advertisement -

சிக்ஸர் உலக சாதனை:

இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜோஸ் டாங், பிரைடன் கார்ஸ் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். இறுதியாக இங்கிலாந்து 371 ரன்கள் என்ற இலக்கைத் துரத்தி வருகிறது. முன்னதாக இப்போட்டியில் ரிஷப் பண்ட் 2 இன்னிங்சிலும் அபாரமாக விளையாடி சதங்கள் அடித்தார். அதன் வாயிலாக இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸிலும் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

மேலும் இப்போட்டியில் மொத்தமாக அவர் 9 (6, 3) சிக்சர்கள் அடித்தார். இதன் வாயிலாக இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இதற்கு முன் 2005 ஆஷஸ் தொடரில் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் ஆண்ட்ரூ ஃபிளின்டாப் 9 சிக்ஸர்கள் அடித்தார்.

- Advertisement -

சதங்கள் உலக சாதனை:

2023 லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் 9 சிக்ஸர்கள் அடித்தார்கள். தற்போது அவர்களுடைய உலக சாதனையை ரிஷப் பண்ட் சமன் செய்துள்ளார். இது போக இங்கிலாந்து மண்ணில் ரிஷப் பண்ட் மொத்தம் 4 சதங்கள் அடித்துள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து மண்ணில் அதிக சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் என்ற உலக சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார்.

இதையும் படிங்க: டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிடின் மாபெரும் சாதனையை சமன் செய்த ஜோ ரூட் – விவரம் இதோ

இதற்கு முன் இங்கிலாந்தின் அலெக்ஸ் ஸ்டீவர்ட் 94, மாட் பிரியர் 68 இன்னிங்ஸில் தலா 4 சதங்கள் அடித்துள்ளார்கள். ஆனால் ரிஷப் பண்ட் வெறும் 19 இன்னிங்சிலேயே 4 சதங்கள் அடித்து அந்த உலக சாதனையை சமன் செய்துள்ளார். அந்த வகையில் ரிஷப் பண்ட் வெளிநாட்டு மண்ணில் இப்போதே ஜாம்பவான் கீப்பராக விஸ்வரூபம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement