இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. ஜூன் இருபதாம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய 471 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 101, ரிசப் பண்ட் 134, கேப்டன் 147 ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.
இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4, ஜோஸ் டாங் 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்தை முடிந்தளவுக்கு போராடிய இந்தியா 465 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. அதிகபட்சமாக ஓலி போப் 106, ஹரி ப்ரூக் 99, பென் டக்கெட் 62 ரன்கள் எடுத்தார்கள். இந்தியாவுக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நாயகன் ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை எடுத்து 6 ரன்களை முன்னிலையாக பெற்றுக் கொடுத்தார்.
ராகுல் அபாரம்:
அடுத்ததாக விளையாடிய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் 4 ரன்களில் அவுட்டானார். அடுத்ததாக வந்த அறிமுக வீரர் சாய் சுதர்சன் 30 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். இருப்பினும் மறுபுறம் சிறப்பாக விளையாடிய ராகுல் அரை சதத்தை அடித்து அசத்தினார். எதிர்ப்புறம் வந்த கேப்டன் சுப்மன் கில் 8 ரன்னில் அவுட்டானார்.
அடுத்ததாக வந்த ரிஷப் பண்ட் நங்கூரம் கலந்த அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்துக்கு சவாலைக் கொடுத்தார். முதல் இன்னிங்ஸில் சதத்தை அடித்த நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் மீண்டும் அரை சதத்தை அடித்தார். அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய ராகுல் சதத்தை அடித்து இந்தியாவை வலுப்படுத்தினார். நேரம் செல்ல செல்ல சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 195 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது.
பண்ட் உலக சாதனை:
அதில் ரிசப் பண்ட் மீண்டும் சதத்தை அடித்து 118 ரன்கள் குவித்து அவுட்டானார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியின் 2 இன்னிங்ஸிலும் சதத்தை அடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சரித்திர சாதனையை ரிஷப் பண்ட் எழுதியுள்ளார். மேலும் ஒரு டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸிலும் சதத்தை அடித்த விக்கெட் கீப்பர் என்ற ஜிம்பாப்வே ஜாம்பவான் ஆண்டி ஃபிளவர் உலக சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார்.
இதையும் படிங்க: பும்ரா ஒரு பிக்சட் டெபாசிட் மாதிரி.. அவருக்கு பாரத ரத்னா விருது குடுங்க – ஆகாஷ் சோப்ரா கருத்து
இதற்கு முன் வரலாற்றில் முதலும் கடைசியுமாக 2001 ஹராரே டெஸ்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆண்டி ப்ளவர் (142, 199*) அந்த உலக சாதனையை படைத்தார். இது போக இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்சிலும் சதத்தை அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் ரிஷப் பண்ட் படைத்துள்ளார். அவருடைய ஆட்டத்தால் 4வது நாள் தேனீர் இடைவெளியில் இந்தியா 298/4 ரன்களை எடுத்துள்ளது.



