- Advertisement -
இந்திய கிரிக்கெட்

92 சிக்ஸ்.. சேவாக்கின் வாழ்நாள் சாதனையை தகர்த்த ரிஷப் பண்ட்.. கம்பேக்கில் புதிய சரித்திர சாதனை

இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் 2 போட்டிகளில் விளையாடி வருகின்றது. நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா வெறும் 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் 31 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

அடுத்ததாக பேட்டிங் செய்யும் இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 12 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். மறுபுறம் கேஎல் ராகுல் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் புதிதாக 3வது இடத்தில் களமிறங்கிய வாசிங்டன் சுந்தர் நங்கூரமாக விளையாடினார். 2வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் சுந்தர் 29 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் கம்பேக்:

அடுத்த சில ஓவரில் மறுபுறம் நிதானமாக விளையாடி வந்த கேஎல் ராகுலும் 39 ரன்களில் மகாராஜ் சுழலில் அவுட்டானார். அப்போது களமிறங்கிய கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலியால் 4* ரன்களுடன் ரிட்டையர்ட் ஹர்ட்டாகி சென்றார். அதைத் தொடர்ந்து ரிசப் பண்ட் தம்முடைய கம்பேக் போட்டியில் அதிரடியாக விளையாடத் துவங்கினார். கடந்த இங்கிலாந்து தொடரில் காலில் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்த அவர் தொடரில் மீண்டும் விளையாடத் துவங்கியுள்ளார்.

அந்த வாய்ப்பில் அதிரடியாக 2 பவுண்டரி 2 சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் 27 (24) ரன்கள் விளாசி விக்கெட்டை இழந்தார். இதையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 48 போட்டிகளில் 92* சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற வீரேந்திர சேவாக் சாதனையை உடைத்துள்ள ரிஷப் பண்ட் புதிய சரித்திர சாதனையை படைத்துள்ளார்.

- Advertisement -

சேவாக்கின் சாதனை தகர்ப்பு:

இதற்கு முன் இந்திய கிரிக்கெட்டின் அதிரடி நாயகன் வீரந்திர சேவாக் 104 போட்டிகளில் 91 சிக்சர்கள் அடித்ததே முந்தைய சாதனை. ஆனால் அவருடைய வாழ்நாள் சாதனையை ரிஷப் பண்ட் 2 மடங்கு வேகத்தில் உடைத்துள்ளார். தொடர்ந்து நடைபெறும் போட்டியில் ரவீந்திர ஜடேஜா 11*, துருவ் ஜுரேல் 5* ரன்கள் எடுத்தனர்.

இதையும் படிங்க: டெஸ்ட் அணியில் வாஷிங்டன் சுந்தர் 3 ஆவது இடத்தில் விளையாட தகுதியானவரா? – புஜாரா கொடுத்த நேரடி பதில்

அப்போது வந்த 2வது நாள் உணவு இடைவெளியில் இந்தியா 138/4 ரன்கள் எடுத்துள்ளது. கைவசம் 6 விக்கெட் வைத்துள்ள இந்தியா இன்னும் 21 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது. எனவே பிட்ச் பேட்டிங் செய்வதற்கு சவாலாக மாறி வருவதால் எப்படியாவது 100 ரன்கள் முன்னிலையாக பெறும் முனைப்புடன் இந்தியா தொடர்ந்து விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -