IND vs RSA : ராசியே இல்லாத கேப்டன் வரிசையில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி ரிஷப் பண்ட் – மோசமான சாதனை

RIshabh Pant Poor Batting
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் கடந்த ஜூன் 9 – 19 வரை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வந்தது. அதில் தலைநகர் டெல்லி மற்றும் கட்டாக் ஆகிய நகரங்களில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் அசால்டாக சேஸிங் செய்து அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற தென் ஆப்பிரிக்கா 12 தொடர் உலக சாதனை வெற்றிகளுடன் வெற்றி நடை போட்டு வந்த இந்தியாவை சொந்த மண்ணில் தடுத்து நிறுத்தி தோல்வியை பரிசளித்தது. ஆனால் அதற்காக பின்வாங்காத இந்திய அணியினர் விசாகப்பட்டினம் மற்றும் ராஜ்கோட்டில் நடந்த அடுத்த 2 போட்டிகளில் பொறுப்புடன் அற்புதமாக பந்துவீசி அபாரமாக பேட்டிங் செய்து பெரிய வெற்றிகளைப் பெற்றனர்.

அதனால் சொந்த மண்ணில் அவ்வளவு எளிதில் தோற்க மாட்டோம் என்று தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்த இந்தியா 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து கடைசி போட்டியில் வென்றால் கோப்பையை வெல்லலாம் என்ற நல்ல நிலைமைக்கு போராடி வந்தது.

- Advertisement -

தொடர் சமன்:
அந்த நிலைமையில் இந்த பரபரப்பான தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான கடைசி போட்டி ஜூன் 19 இரவு 7 மணிக்கு பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்த நிலையில் இந்தியாவை பேட்டிங் செய்ய விடாமல் மழை வந்து தடுத்து ஓய்ந்தது. அதனால் 19 ஓவர்களாக குறைக்கப்பட்டு 7.50 மணிக்கு துவங்கிய இப்போட்டியில் இஷான் கிசான் 15 (7) ருதுராஜ் 10 (12) என தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டானதால் 3.3 ஓவரில் 28/2 என இந்தியா தடுமாறிய போது மீண்டும் ஜோராக வந்த மழை வலுவாக பெய்தது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அடித்து நொறுக்கிய மழை மைதானத்தை முழுவதுமாக தண்ணீரால் நிரம்பி 10.10 மணி வரை தொடர்ந்து பெய்ததால் வேறு வழியின்றி விதிமுறைப்படி இப்போட்டி ரத்து செய்யப்படுவதாக அம்பயர்கள் அறிவித்தனர். அதனால் சமனில் உள்ள இந்த தொடரின் வெற்றியாளராக இரு அணிகளும் அறிவிக்கப்பட்டு 2 அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொண்டன.

- Advertisement -

சுமார் பண்ட்:
இந்த தொடரில் ஹார்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் போன்ற நட்சத்திரங்கள் அற்புதமாக செயல்பட்டது இந்தியாவுக்கு பலமாக அமைந்தது. ஆனால் ரோகித் சர்மா இல்லாத சூழ்நிலையில் அவரின் இடத்தில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய கேப்டன் ரிஷப் பண்ட் படுமோசமாக செயல்பட்டார். முதலில் ஒரு கேப்டனாக எந்தப் பவுலரை எப்போது பயன்படுத்துவது என்று அடிப்படையான முடிவை சரியாக எடுக்க தெரியாமல் சொதப்பிய அவர் சஹால் போன்ற தரமான பவுலர்கள் ஒருசில ஓவர்களில் ரன்கள் வழங்கியதும் அவர்களால் முடிந்தது அவ்வளவுதான் என்று நினைத்து முழுமையான 4 ஓவர்களை வழங்காமல் முன்னாள் வீரர்களின் விமர்சனங்களை வாங்கிக் கட்டிக் கொண்டார்.

அதைவிட குறைவான ரன்களை கொடுத்து துல்லியமாக பந்துவீசிய ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல் ஆகியோருக்கும் ஒருசில போட்டிகளில் முழுமையான 4 ஓவர்கள் வழங்கவில்லை. அப்படி கேப்டனாக சொதப்பிய அவர் ஒரு பேட்ஸ்மேனாகவும் 4 போட்டிகளில் வெறும் 57 ரன்களை மட்டுமே எடுத்தார். அதிலும் 4 போட்டிகளிலும் ஒரே மாதிரியாக அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்தில் அவுட்டான அவர் கொஞ்சம் கூட முன்னேறவில்லை என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கரிடம் திட்டு வாங்கிக் கொண்டார். மேலும் இந்தியாவுக்காக மொத்தமாக இதுவரை 47 போட்டிகளில் வெறும் 740 ரன்களை 23.1 என்ற மோசமான சராசரியில் எடுத்துள்ள அவர் டி20 கிரிக்கெட்டில் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சரிப்பட்டு வரமாட்டார் என்று ரசிகர்கள் பேசும் அளவுக்கு சுமாராகவே செயல்பட்டார்.

- Advertisement -

மோசமான உலகசாதனை:
முன்னதாக இந்த தொடரின் 5 போட்டிகளிலும் வெற்றியை தீர்மானிக்க கூடிய டாஸ் வெல்ல முடியாமல் ரிஷப் பண்ட் தோல்வியடைந்தார். ஆனால் நேற்று காயமடைந்த பவுமாவுக்கு பதில் வந்த தெனாப்ரிக்காவின் கேஷவ் மஹராஜ் கூட முதல் போட்டியிலேயே டாஸ் வென்று அசத்தினார்.

டாஸ் என்பது அதிர்ஷ்டம் சம்பந்தப்பட்டது என்றாலும் கடினமாக உழைப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும் என்று கூறுவார்கள். அந்த வகையில் இந்த தொடரின் 5 போட்டிகளிலும் சுமாராகவே செயல்பட்டதால் கடிமாக உழைக்காத ரிஷப் பண்ட்டை நோக்கி அதிர்ஷ்டம் தேடி வரவில்லை என்றே கூறலாம்.

- Advertisement -

1. இப்படி வரிசையாக 5 போட்டிகளில் தோற்ற அவர் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் 5 போட்டிகளில் தொடர்ச்சியாக 5 டாஸ் தோற்ற முதல் கேப்டன் என்ற மோசமான உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் வரலாற்றில் வேறு எந்த கேப்டனும் இப்படி தனது முதல் 5 போட்டிகளில் தொடர்ச்சியாக டாஸ் தோற்றது கிடையாது.

இதையும் படிங்க : IND vs RSA : மனிதாபிமானம் இல்லையா, இப்படியா பண்ணுவீங்க – ருதுராஜை வெளுக்கும் ரசிகர்கள், என்ன நடந்தது?

2. அதேபோல் இத்தொடரில் அறிமுக கேப்டனாக களமிறங்கிய அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் 5 போட்டிகளிலும் டாஸ் தோற்ற முதல் இந்திய கேப்டன் மோசமான சாதனையை படைத்தார். இதற்கு முன் விராட் கோலி தனது முதல் 4 போட்டிகளில் தோற்றதே முந்தைய சாதனையாக இருந்தது.

Advertisement