இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது பும்ரா பந்துவீசுகையில் இடது கை விரலில் காயம் அடைந்தார். இதன் காரணமாக கீப்பிங் செய்யாத அவர் இரண்டு இன்னிங்சிலும் பேட்டிங் செய்திருந்தார். அதனால் மாற்று விக்கெட் கீப்பராக துருவ் ஜுரேல் கீப்பிங் பணியை மேற்கொண்டிருந்தார்.
ஒன்றாக களமிறங்கும் ரிஷப் பண்ட் மற்றும் துருவ் ஜுரேல் :
அப்படி விரலில் காயம் அடைந்த அவர் விக்கெட் கீப்பிங் செய்ய வரவில்லை என்றாலும் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே கடுமையான வலியுடன் பேட்டிங் செய்து செய்திருந்தார். இந்த தொடரில் அதிக ரன்களை குவித்த வீரராக இரண்டாம் இடத்தில் இருக்கும் ரிஷப் பண்ட் எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களிலும் மிக முக்கியமான வீரராக பார்க்கப்படுகிறார்.
ஆனால் விரலில் ஏற்பட்டுள்ள காயம் முழுவதுமாக குணமடையாமல் அவரை அடுத்த போட்டியில் விளையாட வைப்பது தவறு என்று பலரும் கூறி வருகின்றனர். அப்படி ஒருவேளை ரிஷப் பண்ட் விளையாடவில்லை என்றால் அவருக்கு பதிலாக துருவ் ஜூரேலை மாற்று விக்கெட் கீப்பராக பிளேயிங் லெவனுக்குள் கொண்டு வரவேண்டும் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்திற்கான முக்கிய முடிவினை எடுத்துள்ள நிர்வாகம் : ரிஷப் பண்ட்டை விக்கெட் கீப்பராக பயன்படுத்தாமல் முழுநேர பேட்ஸ்மேனாக பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதேபோன்று துருவ் ஜுரேலை அவர்கள் விக்கெட் கீப்பராக கொண்டுவர நினைக்கிறார்கள்.
அப்படி துருவ் ஜுரேலை கீப்பராகவும், ரிஷப் பண்ட்டை பேட்ஸ்மேனாகவும் கொண்டுவரும் வேளையில் மூன்றாவது இடத்தில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கருண் நாயர் நீக்கப்படுவார் என்று தெரிகிறது. அப்படி கருண் நாயர் வெளியேறும் பட்சத்தில் அவருக்கு பதிலாக மூன்றாவது இடத்தில் துருவ் ஜுரேல் பேட்டிங் செய்வார் என்றும் வழக்கமான ஐந்தாவது இடத்தில் ரிஷப் பண்ட் களத்திற்கு வருவார் என்றும் தெரிகிறது.
இதையும் படிங்க : பும்ரா விளையாடணுமா? வேண்டாமா? கடைசியா அவங்க தான் முடிவை சொல்லணும் – சுரேஷ் ரெய்னா கருத்து
ஏற்கனவே கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது அறிமுகமான துருவ் ஜுரேல் இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 40 ரன்கள் சராசரியுடன் 202 ரன்களை குறித்துள்ளார். அதிலும் குறிப்பாக ராஞ்சி நகரில் நடைபெற்ற போட்டியில் 90 ரன்கள் அடித்து அவர் அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.



