பும்ரா விளையாடணுமா? வேண்டாமா? கடைசியா அவங்க தான் முடிவை சொல்லணும் – சுரேஷ் ரெய்னா கருத்து

Raina and Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் தற்போதைய நிலையில் இங்கிலாந்து அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது மிக முக்கியமான டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் ஜூலை 23-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது.

பும்ரா விளையாடுவது அவங்க கையில் தான் உள்ளது : சுரேஷ் ரெய்னா

ஏனெனில் ஏற்கனவே இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்களில் இரண்டு தோல்விகளை பெற்றுள்ள இந்திய அணி நான்காவது போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரினை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்யமுடியும். இதன் காரணமாக இந்த போட்டியானது இந்திய அணிக்கு வாழ்வா? சாவா? போட்டியாக மாறியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாடுவாரா? மாட்டாரா? என்பதே பலரது கேள்வியாகவும் உள்ளது. ஏனெனில் ஏற்கனவே இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் மூன்று போட்டியில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் ஏற்கனவே இந்த தொடரின் இரண்டு போட்டியில் விளையாடியுள்ள அவர் எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே விளையாட இருக்கிறார். ஆனால் அது எந்த போட்டி? என்பது தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் பும்ரா நான்காவது போட்டியில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது குறித்த தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ள முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா கூறுகையில் :

- Advertisement -

அடுத்த போட்டியில் பும்ரா விளையாடுவது குறித்த முக்கிய முடிவு இந்திய அணியின் மருத்துவர்களின் கையில்தான் உள்ளது. ஏனெனில் என்னுடைய உடம்பு பற்றி எனக்கு தெரியும். அதேபோன்று என்னுடைய மருத்துவருக்கும் தெரியும். அவர் கொடுக்கும் அறிவுரையின் படியே நான் நடந்து வருகிறேன். அந்த வகையில் அவருக்கு அவருடைய உடம்பு எவ்வாறு செயல்படுகிறது? அவரது பணிச்சுமை எவ்வளவு? என்பது நன்றாக தெரியும். அதேபோன்று டாக்டரின் அறிவுறுத்தலின்படி தான் அவரும் நடந்து கொள்வார்.

இதையும் படிங்க : என் இந்திய கேரியரை முடித்து சாதனையை உடைத்த அஸ்வின் மேல பொறாமையா? நேராக பேசிய ஹர்பஜன் – அஸ்வின்

அந்த வகையில் பார்க்கையில் ஏற்கனவே மிகப்பெரிய காயத்திற்கு பிறகு மீண்டு வந்துள்ள அவர் மருத்துவரின் அறிவுரைப்படி தான் போட்டியில் பங்கேற்று வருவார் என்று நம்புகிறேன். அந்த வகையில் இறுதியில் அடுத்த போட்டிக்கு முன்னதாக மருத்துவர்கள் என்ன கூறுகிறார்களோ அதை வைத்து தான் அவர் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது உறுதியாகும் என்று தான் நினைப்பதாக சுரேஷ் ரெய்னா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement