இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்த தொடரில் கொல்கத்தா அணியில் மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய ரிங்கு சிங் இந்த தொடர் முழுவதுமே இடம் பெற்று விளையாடி இருந்தார். அதோடு கடந்த சில ஆண்டுகளாகவே அவரது சிறப்பான ஆட்டம் காரணமாக கொல்கத்தா அணி அவரை தொடர்ச்சியாக ஆதரித்து வருகிறது.
இந்நிலையில் 2025-ஆம் ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்னர் கொல்கத்தா அணி எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும்? எந்த வீரர்களை வெளியேற்றும்? என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் நிச்சயம் கொல்கத்தா அணியால் ரிங்கு சிங் தக்கவைக்கப்படுவார் என்று தெரிகிறது.
ஆனால் ஒருவேளை அவர் கொல்கத்தா அணியிலிருந்து வெளியேற்றப்பட்டால் எந்த அணிக்கு சென்று விளையாடுவார்? என்கிற எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்நிலையில் கொல்கத்தா அணியிலிருந்து தான் வெளியேறும் பட்சத்தில் இரண்டு அணிகளுக்காக விளையாட ஆசை இருப்பதாக ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் கொல்கத்தா அணியில் இருந்து வெளியேற்றப்பட்டால் ஆர்சிபி அணிக்காக விளையாட விரும்புகிறேன். ஏனெனில் விராட் கோலி அங்கு இருக்கிறார். அவருக்காக அவருடன் இணைந்து விளையாட ஆசை என்று ரிங்கு சிங் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசியா அவர் :
அப்படி ஆர்சிபி அணிக்காக விளையாடவில்லை என்றால் சூர்யகுமார் யாதவ் ஒரு நல்ல கேப்டன். அவர் மிகவும் அமைதியான ஒருவர் அதிகம் பேச மாட்டார். எனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாட ஆசை என்று ரிங்கு சிங் கூறியுள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு யாஷ் தயாள் வீசிய கடைசி ஓவரின் போது ஐந்து பந்துகளை தொடர்ச்சியாக சிக்ஸருக்கு விரட்டி அட்டகாசமான வெற்றியை பெற்றுக் கொடுத்த ரிங்கு சிங் அதற்கு அடுத்து அதே ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாக இதுவரை இரண்டு ஒருநாள் போட்டிகள் மற்றும் 23 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இதெல்லாம் சாதாரணமா வந்தது கிடையாது.. அதுக்கு பின்னாடி பெரிய உழைப்பு இருக்கு – ரோஹித் சர்மா பேட்டி
அதோடு இந்திய அணியின் அடுத்த பினிஷராக பார்க்கப்படும் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. மேலும் டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்காகவும் அவர் ரிசர்வ் வீரராக சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.



