எனக்கு இருந்த கஷ்டம் எல்லாம் ஐ.பி.எல் தொடரால் தான் தீர்ந்தது. வறுமையை வென்ற – கொல்கத்தா நாயகன்

Rinku
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 31-ஆம் தேதி துவங்கிய 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் 10 போட்டிகளை தாண்டி ஐபிஎல் தொடரானது சென்று கொண்டிருக்கும் இவ்வேளையில் நடைபெற்று முடிந்த சில போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பினை பெற்றுள்ளது. ஏனெனில் நடைபெற்று முடிந்த சில போட்டிகளிலேயே வெற்றி தோல்வி என்பது கடைசி ஓவர் வரை சென்று நிறைவடைகிறது.

- Advertisement -

அப்படி கடந்த 9-ஆம் தேதி நடைபெற்ற குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியிலும் கூட ஒரே இரவில் ஒரு ஹீரோ உருவானார் என்றே கூறலாம். ஏனெனில் அன்று நடைபெற்ற அந்த போட்டியில் குஜராத் அணி நிர்ணயத்தை இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு கடைசி ஆறு பந்துகளில் 29 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கடைசி ஓவரை எதிர்கொண்ட இளம் வீரர் ரிங்கு சிங் தொடர்ச்சியாக 5 சிக்ஸர்களை அடித்து சாதனை நிகழ்த்தியதுடன் அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி கூட அவரது புகைப்படத்தையும் டி20 உலக கோப்பையில் நான்கு சிக்ஸர்களை அடித்து வெற்றி பெற வைத்த பிராத் வெயிட்டின் புகைப்படத்தையும் ஒன்றாக இணைத்து பாராட்டி இருந்தது. இந்நிலையில் ரிங்கு சிங் குறித்த தேடல் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் வேளையில் தனது கடந்த கால வாழ்க்கை குறித்து ரிங்கு சிங் வெளிப்படையான சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : நான் எனது குடும்ப கஷ்டத்திற்காக எல்லாவற்றையும் செய்கிறேன். இப்போது என் குடும்ப கஷ்டம் ipl தொடரால் முடிந்து விட்டது.

Rinku-Singh

என் தந்தையை வேலையை விட சொல்லி நான் கேட்டுக் கொண்டுள்ளேன். 30 வருடங்களாக அவர் கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்து வருகிறார். ஆனாலும் நான் வேலையை விட சொன்னாலும் என் தந்தை அதைத் தொடர்ந்து செய்து வருகிறார். அதேபோன்று என்னுடைய சிறுவயதில் நானும் என் சகோதரர்களும் தந்தையுடன் இணைந்து வீடு வீடாக சென்று கேஸ் சிலிண்டர் விநியோகித்தோம்.

- Advertisement -

என்னுடைய தந்தை நான் கிரிக்கெட் விளையாடுவதை எதிர்த்தாலும், என்னுடைய தாய் எனக்கு ஆதரவாக இருந்தார். தற்போது எங்களுடைய வாழ்வில் இருந்த அனைத்து கஷ்டங்களும் நீங்கிவிட்டது, கடன் தொல்லையும் முடிந்துவிட்டது. என்னுடைய வாழ்வில் இதுதான் சிறந்த இன்னிங்ஸ். தற்போது கொல்கத்தா அணியில் விளையாடுவதில் மட்டுமே தீவிர கவனம் செலுத்தி வருகிறேன். என்னைப் போன்றே என்னுடைய இளைய சகோதரரும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறார்.

இதையும் படிங்க : வீடியோ : வலது கை பேட்ஸ்மேனாக மாறியும் முன்னேறாமல் சொதப்பிய வார்னர் – கலாய்க்கும் ரசிகர்கள், காப்பாற்றிய அக்சர் பட்டேல்

இருந்தாலும் ஐபிஎல் போன்ற தொடர்களில் இடம் பெற கடினமாக உழைக்க வேண்டும் நான் இந்த இடத்திற்கு வந்தடைய 6-7 ஆண்டுகள் ஆகியது என ரிங்கு சிங் கூறியது குறிப்பிடத்தக்கது. ரிங்கு சிங்கின் தந்தை கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்கிறார் என்பதும், அவரது சகோதரர்கள் இருவர் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement