- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டெஸ்ட் அணியில் இடம்பெறாத போதும் இந்திய வீரர்களுடன் டக் அவுட்டில் அமர்ந்திருந்த ரிங்கு சிங் – ஏன் தெரியுமா?

தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி முடித்தது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது செஞ்சூரியன் நகரில் நேற்று டிசம்பர் 26-ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணியானது முதல்நாள் ஆட்டநேர முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்துள்ளது. கே.எல் ராகுல் 70 ரன்களுடனும், முகமது சிராஜ் ரன்கள் எதுவும் எடுக்காமல் களத்தில் உள்ளனர்.

- Advertisement -

அதனை தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த சுற்றுப்பயணத்திற்கான டி20 மற்றும் ஒருநாள் அணியில் இடம் பெற்று விளையாடியிருந்த அதிரடி ஆட்டக்காரரான ரிங்கு சிங் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்தாலும் இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியை டக் அவுட்டில் அமர்ந்து வேடிக்கை பார்த்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

மேலும் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இடம் பெற்றிருந்த வீரர்கள் அனைவரும் நாடு திரும்பியுள்ள வேளையில் டெஸ்ட் அணியில் இடம்பெறாமல் இருக்கும் ரிங்கு சிங் மட்டும் ஏன் இன்னும் இந்திய அணியுடன் இருக்கிறார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இடம் பிடித்து விளையாடியிருந்த அவர் தற்போது இந்திய ஏ அணியுடன் இணைந்து தென்னாப்பிரிக்க மண்ணில் தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளார்.

இதையும் படிங்க : அவருமட்டும் இருந்திருந்தா தெ.ஆ வீரர்கள் எல்லாம் பவுண்டரி லைன்ல தான் இருந்திருப்பாங்க – இந்திய வீரரை ட்ரென்டாக்கும் ரசிகர்கள்

இதன் காரணமாகவே அந்த போட்டிகளுக்காக தயாராகும் விதத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியை அவர் நேரில் கண்டு ரசித்ததாகவும் மேலும் இந்த போட்டியின் மூலம் கிடைக்கும் அனுபவங்களை வைத்து அந்த போட்டியில் அவர் பங்கேற்பதற்காகவும் இந்திய அணியினருடன் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -