எல்லாரும் அசத்தி வரும் வேளையில் சைலண்டாக சொதப்பி வரும் ரிங்கு சிங் – இதை கவனிச்சீங்களா

Rinku-Singh
- Advertisement -

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வைக்கிறது. அதனை தொடர்ந்து இந்த முடிவின் இந்த தொடரின் முடிவை தீர்மானிக்கும் நான்காவது மற்றும் இறுதி டி20 போட்டியானது நாளை ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற இருக்கிறது.

இந்திய அணியில் சொதப்பி வரும் ரிங்கு சிங் :

இந்நிலையில் இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் பல்வேறு இந்திய அணியின் வீரர்கள் அசத்தி வரும் வேளையில் இந்திய அணியின் ஃபினிஷராக பார்க்கப்படும் ரிங்கு சிங் மட்டும் சொதப்பி வருவது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் அற்புதமான செயல்பட்டு வந்த அவர் தற்போது தடுமாற்றத்தை சந்தித்து வருவது கண்கூடாக தெரிகிறது.

- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வீரராக பார்க்கப்படும் ரிங்கு சிங் கடந்த ஏழு இன்னிங்ஸ்களில் 91 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். அதிலும் குறிப்பாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்றிருந்தாலும் இந்த போட்டியில் விளையாடிய ரிங்கு சிங் 13 பந்துகளை சந்தித்து வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் அவரது பார்ம் தடுமாற்றத்தை சந்தித்துள்ளது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் சோபிக்காத அவர் மூன்றாவது போட்டியிலும் இப்படி சொற்ப ரன்களில் வெளியேறியது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

- Advertisement -

இருந்தாலும் இப்படி ரிங்கு சிங் பேட்டிங்கில் தடுமாற காரணம் அவருக்கு நிலையான பேட்டிங் ஆர்டர் இல்லை என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது. ஏனெனில் கடந்த சில போட்டிகளாகவே அவர் நம்பர் 6, நம்பர் 7 என அடிக்கடி இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்.

இதையும் படிங்க : 7 ஓவர் போட்டியில் 16-5 என திணறிய பாகிஸ்தான்.. மோசமான சாதனை.. மேக்ஸ்வெல் அதிரடியில் ஆஸி வெற்றி

இதன் காரணமாக அவருக்கு போதிய பேட்டிங் டைம் கிடைக்காதது தான் அவரது சரிவுக்கு காரணமாக பலரும் கூறி வருகின்றனர். குறிப்பாக இந்திய அணியின் நான்காவது வீரராக ரிங்கு சிங் களமிறங்கிய போதெல்லாம் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் இனி அவருக்கு முன்கூட்டியே பேட்டிங் வாய்ப்பு தர வேண்டும் என்று பல்வேறு கருத்துக்கள் உலா வருகின்றன.

Advertisement