ஐ.பி.எல் கிங்ன்னா அது அவர்தான். அவரே என்னோட ரோல்மாடல். தோனி கோலி கிடையாது – ரிங்கு சிங் கருத்து

Rinku-Singh
- Advertisement -

இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற முடிந்த 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொல்கத்தா அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரிங்கு சிங் 14 போட்டிகளில் விளையாடி நான்கு அரை சதங்கள் உட்பட 474 ரன்கள் குவித்து அசத்தினார். அதிலும் 59 ரன்கள் சராசரியுடன், 150 ஸ்ட்ரைக் ரேட்டுடன் அதிரடியில் அசத்தியிருந்தார். இதனால் மிடில் ஆர்டரில் இவரைப்போன்ற ஒரு வீரர் இந்திய அணிக்கு தேவை என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் பாராட்டியிருந்தனர்.

Rinku Singh 1

- Advertisement -

குறிப்பாக குஜராத் அணிக்கு எதிரான ஒரு போட்டியின் போது கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்ஸர்களை அடித்து கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்த ரிங்கு சிங் தற்போது முதல் முறையாக இந்திய அணிக்கும் தேர்வாகியுள்ளார். அந்த வகையில் ஏசியன் கேம்ஸ் தொடருக்கான ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

என்னதான் முதன்மை இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்றாலும் இந்த ஏசியன் கேம்ஸ் தொடரில் அவர் மிடில் ஆர்டரில் களமிறங்கி அசத்தும் பட்சத்தில் வெகுவிரைவாக அவர் முதன்மை அணிக்காகவும் தேர்வாகி விளையாட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியில் முதல் முறையாக அழைப்பினை பெற்று சீனா சென்று விளையாட உள்ள ரிங்கு சிங் தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

Raina

அதில் அவர் கூறியதாவது : சுரேஷ் ரெய்னா தான் என்னுடைய ரோல் மாடல் அவருடன் நான் தொடர்ந்து டச்சில் இருந்து வருகிறேன். அவர் தான் ஐபிஎல் தொடரின் கிங். அவருடன் நான் பலமுறை ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளேன். அதோடு அவரும் அவருடைய அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து என்னுடைய ஆட்டத்தில் முன்னேற்றத்தைக் கொண்டு வர அதிகளவில் உதவுகிறார்.

- Advertisement -

எனக்கு தனிப்பட்ட முறையிலும் அவர் நிறைய உதவிகளை செய்துள்ளார். அதேபோன்று ஹர்பஜன் சிங்கும் என்னுடைய கிரிக்கெட் வளர்ச்சிக்காக ஏகப்பட்ட உதவிகளை செய்திருக்கிறார்.

இதையும் படிங்க : வெறும் டேலண்ட் மட்டும் போதாது, அஸ்வின் என்னையே மிஞ்சுவதற்கு காரணம் அது தான் – அனில் கும்ப்ளே பாராட்டு

இப்படி என் வாழ்க்கையில் நிறைய நல்ல விஷயங்கள் நடந்துள்ளன. நான் அவர்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் எப்போதும் உண்மையுள்ளவனாகவும், நன்றியுள்ளவனாகவும் இருப்பேன். இது போன்ற வீரர்களின் ஆதரவு எனக்கு இருப்பது என்னை இன்னும் சிறப்பாக செயல்பட தூண்டுகிறது என ரிங்கு சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement