வெறும் டேலண்ட் மட்டும் போதாது, அஸ்வின் என்னையே மிஞ்சுவதற்கு காரணம் அது தான் – அனில் கும்ப்ளே பாராட்டு

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவக்கி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது. அந்த போட்டியில் அறிமுகமாக களமிறங்கிய இளம் வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் 171 ரன்கள் விளாசி ஏராளமான சாதனைகளை படைத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார். அவரை விட பந்து வீச்சில் மொத்தமாக 12 விக்கெட்களை சாய்த்த ரவிச்சந்திரன் அஸ்வின் வெஸ்ட் இண்டீஸை இரண்டரை நாட்களில் சுருட்டுவதற்கு முக்கிய பங்காற்றினார்.

Ashwin 2

- Advertisement -

அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அதிக முறை 5 விக்கெட் ஹால் எடுத்த இந்திய வீரர் என்ற அனில் கும்ப்ளே சாதனையை தகர்த்த அவர் சர்வதேச அளவில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய ஆஃப் ஸ்பின்னர் என்ற ஹர்பஜன் சிங் ஆல் டைம் சாதனையை உடைத்தார். அதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் எனக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை என்று ரோகித் சர்மா தலைமையின் இந்திய அணிக்கு தக்க பதிலடி கொடுத்த அவர் தன்னை நம்பர் ஒன் பவுலர் என்பதையும் நிரூபித்தார்.

கும்ப்ளே பாராட்டு:
குறிப்பாக ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையில் 5 இடது கை வீரர்கள் இருந்தும் ஃபைனலில் தேர்வாக அவர் இந்த போட்டியிலும் தக்நரேன் சந்தர்பால் போன்ற இடது கை பேட்ஸ்மேன்களை பெட்டிப் பாம்பாக அடக்கினார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு தந்தை – மகன் ஜோடியை அவுட்டாக்கிய முதல் இந்தியர் என்ற மாபெரும் வரலாற்றுச் சாதனையையும் அஸ்வின் படைத்தார். இந்நிலையில் 10 வருடங்களாக விளையாடிய அனுபவம் மற்றும் திறமை என்பதை தாண்டி எதிரணி பேட்ஸ்மேன்களின் மனதைப் படித்து அதற்கேற்றார் போல் உடனடியாக தம்முடைய திட்டங்களை மாற்றி செயல்படுவதே ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தளவுக்கு வெற்றிகரமாக இருப்பதற்கு காரணம் என்று ஜாம்பவான் அனில் கும்ப்ளே பாராட்டு தெரிவித்துள்ளார்.

Anil Kumble

இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “அஸ்வின் எப்போதுமே பேட்ஸ்மேன்களின் மனதுடன் விளையாடுகிறார். அந்த வகையில் திறமையால் மட்டும் நீங்கள் வெற்றிகரமாக செயல்பட்டு விட முடியாது. மாறாக போட்டியில் நிலவும் அழுத்தத்தை அப்படியே பேட்ஸ்மேன் பக்கம் திருப்பும் தன்னை உங்களிடம் இருக்க வேண்டும். அதை ரவிச்சந்திரன் அஸ்வின் செய்வதற்கான எதிரொலியை பேட்ஸ்மேன்களின் பாடி லாங்குவேஜில் உங்களால் தெளிவாக பார்க்க முடியும். எடுத்துக்காட்டாக இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அவர் க்ரீஸ்க்கு மிகவும் அகலமாக இருந்து பந்து வீசுகிறார்”

- Advertisement -

“அதனால் இடது கை வீரர்கள் பந்து உள்ளே வரும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அஸ்வின் அப்படியே அதை ட்ரிப்ட் செய்து தக்நரேன் சந்தர்பாலை தாண்டி ஆஃப் ஸ்டம்ப்பில் அடித்தார்” என்று கூறினார். அவர் கூறுவது போல பொதுவாகவே கிரிக்கெட்டின் விதிமுறைகளை ஆழமாக பேசக்கூடிய ரவிச்சந்திரன் அஸ்வின் நேர்மைக்கு புறம்பாக இருந்த மன்கட் அவுட்டை இன்று எம்சிசி மற்றும் ஐசிசி அதிகாரப்பூர்வமாக ரன் அவுட் பிரிவுக்கு மாற்றும் அளவுக்கு ஆக்கப்பூர்வமாக செயல்படுபவராக இருந்து வருகிறார்.

Ashwin

மேலும் காலத்திற்கு தகுந்தார் போல் அப்டேட் செய்வது போல் தம்முடைய டெக்னிக்கில் நிறைய மாற்றங்களையும் புதுமைகளையும் புகுத்துவதாலேயே அவரால் இந்தளவுக்கு வெற்றிகரமாக செயல்பட முடிகிறது என்றே சொல்லலாம். அந்த வகையில் மிகவும் அறிவுபூர்வமாக செயல்படக்கூடிய அவர் சுமார் 500 விக்கெட்டுகளும் 3000க்கும் மேற்பட்ட ரன்களையும் எடுத்து சச்சின் டெண்டுல்கரை மிஞ்சி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தொடர் நாயகன் விருதுகளை வென்ற வீரராக இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

இதையும் படிங்க:உலககோப்பை 2023 : இன்னும் 50 நாட்கள் தான் இருக்கு.. 10 அணிகளுக்கும் கெடு விதித்த ஐ.சி.சி – சீக்கிரம் முடிவு பண்ணி சொல்லுங்க

ஆனால் அப்படி 10 வருடங்கள் வெற்றிகளில் பங்காற்றியும் இதுவரை துணை கேப்டன்ஷிப் பதவியை கூட பெறாத அவருக்கு விளையாடும் 11 பேர் அணியிலேயே இன்னும் நிலையான இடம் கிடைக்கவில்லை என்பது தமிழக ரசிகர்களை ஆதங்கப்பட வைக்கிறது என்றே சொல்லலாம்.

Advertisement