தற்போதைய கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் இவர்தான் – கொல்கத்தா அணி வீரர் பேட்டி

Rinku

பல்வேறு இன்னல்களை கடந்து இந்த வருட ஐபிஎல் தொடர் பதிமூன்றாவது சீசனாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று உறுதி ஆகி உள்ளது. எனவே இந்தத்தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரை காண அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Dubai

இந்நிலையில் இந்த தொடர் குறித்து ஒவ்வொரு அணியின் பயிற்சியாளர்கள், வீரர்கள், முன்னாள் வீரர்கள் கிரிக்கெட், விமர்சகர்கள் என பலரும் தங்களது கருத்துக்களை ஓப்பனாக பேசிவருகின்றனர். அதேபோல் சில கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் நிபுணர்கள் ஆகியோர் இந்த தொடர் குறித்த தங்களது கணிப்புகளையும் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கொல்கத்தா அணியின் இளம் வீரரான ரிங்கு சிங் உலகின் தலை சிறந்த ஆல்ரவுண்டர் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஆண்ட்ரே ரசல் போன்ற ஒரு ஆல்ரவுண்டர் யாரும் இல்லை. ஏனெனில் அவரைவிட பந்தை யாராலும் சிறப்பாக அடிக்க முடியாது. அவரிடம் அதிகமான அதிகமான வலிமை உள்ளது.

Russell

அவருடைய சிக்ஸர் எல்லாம் மிகப் பெரியதாக இருக்கும். அவரிடம் போட்டியிடும் அளவிற்கு மற்ற பேட்ஸ்மேன்களை என்னால் பார்க்க முடியவில்லை. தற்போதைய நிலையில் அவர் தான் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர். அவருடன் இணைந்து விளையாடினாலும் அதிகமாக பேசியது கிடையாது ஏனென்றால் எனக்கு ஆங்கிலம் எளிதாக பேசவராது.

- Advertisement -

Russell

இருப்பினும் அவருடன் இணைந்து வீரர்கள் அறையில் பிறந்தநாளை சந்தோஷமாக கொண்டாடினோம் என்று அவர் கூறினார். கடந்த 2019ஆம் ஆண்டு 14 ஆட்டங்களில் விளையாடி ரசல் 204.81 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 510 ரன்களை குவித்தார். அத்துடன் 11 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.