தப்பு என் மேல தான் இருக்கு.. துலீப் கோப்பை இந்திய அணிகளில் தேர்வு செய்யப்படாதது ஏன்? ரிங்கு விளக்கம்

Rinku Singh 2
- Advertisement -

துலீப் கோப்பை 2024 உள்ளூர் கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி பெங்களூரு நகரில் துவங்குகிறது. அதில் ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில், ருதுராஜ், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் தலைமையில் மொத்தம் 4 அணிகள் விளையாட உள்ளன. அந்த 4 அணிகளில் பும்ரா, விராட், ரோஹித் ஆகியோரை தவிர்த்து பெரும்பாலான இந்திய வீரர்கள் விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

அந்தத் தொடரில் விளையாட தமிழ்நாட்டில் இருந்து வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர், சாய் சுதர்சன், பாபா இந்திரஜித் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இருப்பினும் மற்றொரு தமிழக வீரர் நடராஜனுக்கு அந்தத் தொடரில் வாய்ப்பு கிடைக்காதது தமிழக ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதே போல இளம் வீரர் ரிங்கு சிங் அந்த தொடரில் கழற்றி விடப்பட்டதும் ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது.

- Advertisement -

காரணம் என்ன:
ஏனெனில் 2023 ஐபிஎல் தொடரில் கடைசி 5 பந்துகளில் 5 சிக்சர்கள் அடித்து அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் பெரும்பாலான போட்டிகளில் அசத்திய அவர் இந்தியாவின் வெற்றிகளிலும் பங்காற்றினார். அதனால் தோனிக்கு பின் சிறந்த ஃபினிஷர் கிடைத்துள்ளதாக ரசிகர்கள் அவரை பாராட்டினர்.

அதனாலேயே கடந்த இங்கிலாந்து தொடரில் முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியில் பேக்-அப் வீரராக ரிங்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். அதனால் துலீப் கோப்பையிலும் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் டி20 அளவுக்கு சமீபத்திய உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் தாம் அசத்தவில்லை என்று ரிங்கு சிங் கூறியுள்ளார்.

- Advertisement -

அதனாலேயே தம்மை தேர்வாளர்கள் துலீப் கோப்பையில் தேர்ந்தெடுக்காமல் விட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்ருமாறு. “ஒன்றுமில்லை. நான் உள்ளூர் சீசனில் நன்றாக செயல்படவில்லை. மேலும் நான் நிறைய ரஞ்சிக் கோப்பை போட்டிகளிலும் விளையாடவில்லை. 2 – 3 போட்டிகளில் மட்டுமே விளையாடினேன்”

இதையும் படிங்க: தேவையில்லாத ரெஸ்ட் எதுக்கு.. இதனால கஷ்டப்பட போறது அவங்க தான்.. ஜெய் ஷா மீது கவாஸ்கர் அதிருப்தி

“அந்த வகையில் நான் நன்றாக விளையாடாததாலேயே தேர்ந்தெடுக்கவில்லை. இருப்பினும் அடுத்த சுற்றுப் போட்டிகளில் நான் தேர்ந்தெடுக்கப்படலாம்” என்று கூறினார். முன்னதாக ரிங்கு சிங் இதுவரை 47 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 7 சதங்கள் 20 அரை சதங்கள் அடித்துள்ள அவர் 3173 ரன்களை எடுத்து ஓரளவு நன்றாகவே செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement