- Advertisement -
இந்திய கிரிக்கெட்

41/3 என சரிந்த போது.. தோனி பாய் சொன்னதை தான் செஞ்சேன்.. இந்திய அணியை மீட்டது பற்றி ரிங்கு பேட்டி

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தலைநகர் டெல்லியில் அக்டோபர் ஒன்பதாம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 221-9 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 74, ரிங்கு சிங் 53, ஹர்திக் பாண்டியா 32 ரன்கள் எடுத்தனர்.

வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக ரிசாத் ஹுசைன் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 222 ரன்களை துரத்திய வங்கதேசம் முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் 135-9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக முகம்மதுல்லா 41 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு நித்திஷ் ரெட்டி, தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

அசத்திய ரிங்கு:

அதனால் முதல் போட்டியில் பெற்ற வெற்றியும் சேர்த்து 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை வகிக்கும் இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. முன்னதாக இந்தப் போட்டியில் துவக்க வீரர்கள் சஞ்சு சாம்சன் 10, அபிஷேக் சர்மா 15, கேப்டன் சூரியகுமார் 8 ரன்களில் அவுட்டானார். அதனால் 41-3 என இந்திய அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது.

அப்போது ஜோடி சேர்ந்த இளம் வீரர்கள் ரிங்கு சிங் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவிலிருந்து இந்தியாவை மீட்டெடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றினர். இந்நிலையில் ஆரம்பத்திலேயே விக்கெட்களை விழும் போது தன்னம்பிக்கையுடன் விளையாடி அணியை மீட்டெடுக்க வேண்டும் என்று எம்எஸ் தோனி சொன்னது உதவியதாக ரிங்கு சிங் கூறியுள்ளார். இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

தோனியின் வார்த்தைகள்:

“கடினமான நேரங்களில் அமைதியாக இருக்க வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டதே செயல் முறையாகும். இந்த இடத்தில் நீண்ட காலமாக விளையாடி வருவதால் அது எனக்கு இயற்கையாகவே வரக்கூடிய ஒன்றாகும். சூழ்நிலைக்கு தகுந்தார் போல் நான் பயிற்சி செய்கிறேன். இது பற்றி நான் மஹி பாயிடம் நிறைய பேசியது உதவியது. ஆரம்பத்திலேயே 3 – 4 விட்கெட்டுகள் விழும் போது நீங்கள் தன்னம்பிக்கையுடன் விளையாட வேண்டும்”

இதையும் படிங்க: நாட்டுக்காக இதை செஞ்சது பெருமை.. லைசென்ஸ் கொடுத்த அந்த 2 பேருக்கு நன்றி.. ஆட்டநாயகன் நிதிஷ் பேட்டி

“பிட்ச் கொஞ்சம் மெதுவாக இருந்த நிலையில் நிதிஷ் ரெட்டியும் நானும் பார்ட்னர்ஷிப் அமைக்க முயற்சித்தோம். முகமதுல்லா வீசிய நோபாலுக்கு பின் போட்டியின் வேகம் எங்கள் பக்கம் திரும்பியது. அந்தப் பந்துக்குப்பின் நித்திஷ் ரெட்டி தன்னம்பிக்கையை பெற்று அதிரடியாக விளையாடினார்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து மூன்றாவது மற்றும் கடைசி போட்டி வரும் அக்டோபர் 12ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -