லெஜெண்ட் கெளதம் சார் தான் எனக்கு.. அந்த ஷாட்டை கத்துக்கொடுத்து மகத்தான ஆதரவை கொடுத்தாரு.. ரிங்கு பேட்டி

Rinku Singh 2
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் துவங்குகிறது. அத்தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி விளையாட உள்ளது. அந்த அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால் கழற்றி விடப்பட்டு சுப்மன் கில் துணைக் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டது விமர்சனங்களை எழுப்பியது. குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயரை கழற்றி விட்டதற்கு பல முன்னாள் வீரர்கள் விமர்சனம் தெரிவித்தனர்.

அதற்கு யாருக்கு பதிலாக ஸ்ரேயாஸை தேர்ந்தெடுப்பது என்று சொல்லுங்கள்? என தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் பதிலளித்தார். அப்போது கடந்த ஐபிஎல் தொடரில் தடுமாற்றமாக விளையாடிய ரிங்கு சிங், சிவம் துபேவுக்கு ஆகியோருக்கு பதில் தேர்ந்தெடுக்கலாமே என்று சில முன்னாள் வீரர்கள் பதிலடி கொடுத்தனர். அந்த சூழ்நிலையில் உத்தரபிரதேசத்தில் நடைபெறும் யூபி டி20 தொடரில் ரிங்கு மிரட்டலான சதத்தை எடுத்து ஃபார்முக்கு திரும்பினார்.

- Advertisement -

கம்பீரின் ஆதரவு:

அதனால் தன்னுடைய ஆசியக் கோப்பை தேர்வை அவர் நியாயப்படுத்தியுள்ளார் என்றே சொல்லலாம். இந்நிலையில் கொல்கத்தா அணியிலிருந்து இந்திய அணி வரை கௌதம் கம்பீர் தமக்கு நிறைய ஆதரவையும் தன்னம்பிக்கையும் கொடுத்து வருவதாக ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஃபுல் ஷாட்டை எப்படி சிறப்பாக அடிக்க வேண்டும் என்பதை அவரிடம் கொல்கத்தா அணியில் கற்றுக் கொண்டதாகவும் ரிங்கு கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கௌதம் கம்பீர் சார் எப்போதும் எனக்கு நிறைய ஆதரவுகளைக் கொடுத்துள்ளார். அவரை முதல் முறையாக கொல்கத்தா அணியில் பார்த்த போது எனக்கு நிறைய தன்னம்பிக்கையைக் கொடுத்தார். கொல்கத்தா அணியில் அவருடன் சேர்ந்து நான் நீண்ட பயிற்சிகளை செய்துள்ளேன். அப்போது ஃபுல் ஷாட் குறித்து அவர் என்னிடம் நிறைய விளக்கம் கொடுத்தார்”

- Advertisement -

லெஜெண்ட் கம்பீர்:

“அவர் எப்போதும் தனது வீரர்களுக்கு ஆதரவளிப்பது நல்ல உணர்வைக் கொடுக்கும். உங்களிடம் வந்து அவர் பேசி தன்னம்பிக்கையை ஊசியாக போடுவார். விளையாட்டின் நல்ல அறிவைக் கொண்ட அவருடன் பேட்டிங், பவுலிங் அல்லது பயிற்சி உட்பட அனைத்து வகையிலும் நான் மகிழ்ச்சியுடன் வேலை செய்தேன். அவருடன் சில விஷயங்களை பகிர்ந்து கொள்வது வேடிக்கையாக இருக்கும்”

இதையும் படிங்க: 2019இல் நீயெல்லாம் என்னத்த அடிக்கப் போறன்னு கலாய்த்த கோலி.. எனக்காகவே அதை தள்ளி போட்டாரு.. இஷாந்த்

“அவருடைய பயிற்சியில் மீண்டும் விளையாட நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். கௌதம் கம்பீர் சார் போன்ற ஜாம்பவானுடன் உடைமாற்றும் அறையைப் பகிர்ந்து கொள்வது உங்களுக்கு ஸ்பெஷல் உணர்வைக் கொடுக்கும். ஆசியக் கோப்பைக்காக துபாய் சென்றதும் அவருடன் மீண்டும் பேசுவேன். அவரை மீண்டும் சந்தித்து கற்றுக்கொள்ள உற்சாகத்துடன் இருக்கிறேன். என்னுடைய கேரியரில் அவர் மகத்தான ஆதரவை கொடுத்துள்ளார்” என்று கூறினார்.

Advertisement