இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் விராட் கோலி மற்றும் இஷாந்த் சர்மா மிகவும் நெருங்கிய நண்பர்களாக பார்க்கப்படுகிறார்கள். டெல்லியை சேர்ந்த அவர்கள் 17 வயதிலிருந்தே உள்ளூரில் ஒன்றாக விளையாடத் துவங்கியதால் நீண்ட கால நட்பை வைத்துள்ளனர். அதனாலேயே தம்முடைய அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரே நபராக இஷாந்த் சர்மா திகழ்வதாக சமீபத்தில் விராட் கோலி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 2019 ஜமைக்கா டெஸ்ட் போட்டியில் நீயெல்லாம் எங்கே பேட்டிங் செய்யப் போகிறாய்? என்ற வகையில் விராட் கோலி தம்மை கலாய்த்ததாக இஷாந்த் சர்மா கூறியுள்ளார். அதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கத்தில் சிறப்பாக விளையாட முயற்சித்ததாகவும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து சிறப்பாக விளையாடியதைப் பார்த்த விராட் கோலி முதல் அரை சதத்தை அடிப்பதற்காக டிக்ளர் செய்வதை தள்ளிப் போட்டதாகவும் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
கலாய்த்த விராட் கோலி:
இது பற்றி குஜராத் டைட்டன்ஸ் ட்விட்டர் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய முதல் அரை சதத்தை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அடித்தது ஸ்பெஷலானது. அன்றைய நாளில் ஜமைக்காவில் நடைபெற்ற போட்டியில் நான் மிகவும் ரிலாக்ஸாக விளையாடினேன். அன்றைய நாளில் பேட்டிங் செய்ய களத்திற்கு செல்வதற்கு முன்பாக மேஜை மேதை மேலே காலை போட்டுக்கொண்டு நான் விராட் கோலியிடம் மிகுந்த ரிலாக்ஸாக பேசினேன்”
“அப்போது களத்தில் நீ என்ன செய்யப் போகிறாய்? என்று விராட் கேட்டார். அதற்கு நான் சிறப்பாக பேட்டிங் செய்து ரன்கள் அடிக்கப் போகிறேன் என்று சொன்னேன். அதைக் கேட்ட விராட் கோலி சிரித்துக்கொண்டே போய் வேலையைப் பாரு என்று சொன்னார். டெல்லி பையன்களான நாங்கள் சிறுவயதிலிருந்தே ஒன்றாக விளையாடி வருகிறோம். 17 வயதுக்கு முன்பிருந்தே நாங்கள் விளையாடத் துவங்கினோம்”
நேரத்தை வழங்கிய கோலி:
“அதனால் போ மனிதா, போய் களத்தில் நின்று பந்தை மட்டும் எதிர்கொள், தேவையான ரன்களை ஹனுமா விகாரி அடிப்பார் என்று விராட் கோலி சொன்னார். அதைத்தொடர்ந்து விகாரியும் நானும் பேட்டிங் செய்தோம். அப்போது எம்மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்தட்டும் என்று என்னிடம் விகாரி கேட்டார். அதற்கு எப்போதும் போல கவலைப்படாமல் விளையாடுங்கள், நான் என்னுடைய விக்கெட்டை தூக்கி எறிய மாட்டேன் என்று விகாரிடம் சொன்னேன்”
இதையும் படிங்க: நான் வெறும் டி20 பிளேயர் கிடையாது.. அதுல 55 ஆவரேஜ் வெச்சுருக்கும் என்னிடம் இந்தியாவுக்காக 2 கனவு இருக்கு.. ரிங்கு
“அந்த வகையில் நாங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தோம். ஆனால் 60 பந்துகள் எதிர்கொண்டதும் நான் சோர்வடைந்து விட்டேன். அப்போது உடைமாற்றும் அறையைப் பார்த்தேன். அங்கே இந்திய கேப்டன் (கோலி) நாங்கள் டிக்ளர் செய்யப்போவதில்லை, நீங்கள் பேட்டிங் செய்வதை விரும்புகிறோம் என்று சொன்னார். எனக்கோ பவுலிங் செய்வதைக் காட்டிலும் பேட்டிங்கில் 60 பந்துகளை எதிர்கொண்டதால் வியர்த்துக் கொட்டியது. அப்படி அன்றைய நாள் பேட்டிங்கில் கடினமாக இருந்தது” என்று கூறினார்.



