2024 டி20 உ.கோ இந்திய அணியில் 6வது இடத்தில் விளையாட.. அவர் தான் தகுதியானவர்.. ஜேக் காலிஸ் பாராட்டு

Jacques Kallis 3
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்திய அணி விளையாடும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் டிசம்பர் 10ஆம் தேதி டர்பன் நகரில் தொடங்கியது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தேவையான வீரர்களை கண்டறியும் பயணத்தின் அங்கமாக நடைபெறும் இத்தொடரில் சமீபத்தில் ஆஸ்திரேலியாவை 4 – 1 என்ற கணக்கில் தோற்கடித்த சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

அதில் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, ஆசிய விளையாட்டுப் போட்டிகள் போன்ற தொடர்களில் ஜெய்ஸ்வால், ருதுராஜ், ரவி பிஷ்னோய் போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி தங்களை அடுத்த தலைமுறை வீரர்களாக அடையாளப்படுத்தியுள்ளனர். அதிலும் குறிப்பாக மிடில் ஆர்டரில் விளையாடும் இடது கை பேட்ஸ்மேன் ரிங்கு சிங் அடுத்த ஃபினிஷராக உருவெடுப்பார் என்று ரசிகர்கள் ஆழமாக நம்பும் அளவுக்கு தொடர்ந்து அசத்தி வருகிறார்.

- Advertisement -

6வது இடத்தின் நாயகன்:
இந்நிலையில் இந்திய டி20 அணியில் இத்தொடர் மட்டுமல்லாமல் 2024 டி20 உலகக் கோப்பை போன்ற வருங்கால தொடர்களில் 6வது இடத்தில் விளையாடுவதற்கு ரிங்கு சிங் மிகவும் பொருத்தமானவர் என்று தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஜேக் காலிஸ் கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக அவர் பேசியது பின்வருமாறு.

“ரிங்கு க்ளாஸ் வீரர் என்பதை கடந்த சில மாதங்களாக வெளிப்படுத்திய செயல்பாடுகளால் நீங்கள் அறிய முடியும். இந்தியாவுக்காக அவர் போட்டிகளை ஃபினிஷிங் செய்துள்ளார். அது முட்டாள்தனமான கிரிக்கெட் அல்ல. ஃபினிஷிங் என்பது தேவையான நேரத்தில் நீங்கள் நல்ல ஷாட்டுகளை அடிப்பதாகும். அந்த வகையில் இன்னிங்ஸின் கடைசி நேரங்களில் தேவைப்படும் போது அவர் அட்டாக் செய்து விளையாடுகிறார்”

- Advertisement -

“அவர் தான் இந்தியாவுக்காக 6வது இடத்தில் விளையாடக்கூடிய சரியான வீரர். அவர் இருப்பது இதர வீரர்களுக்கும் போட்டியை வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்வதற்கான தன்னம்பிக்கையை கொடுக்கும். அதாவது ஒருவர் சிறப்பாக செயல்படாமல் போனால் இதர வீரர்களில் சிலர் வந்து வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியும். எனவே என்னை பொறுத்த வரை ரிங்கு சிங் 6வது விளையாடுவதற்கு சரியானவர். அவருக்கு நியாயமான வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: ரோஹித் சர்மா ஆள் பாக்க தான் பல்க்கா இருக்காரு.. ஆனா அவரு விராட்டுக்கு சமம் – உடற்தகுதி நிபுணர் பேட்டி

முன்னதாக யுவராஜ் சிங் போல மிடில் ஆர்டரில் வருங்காலங்களில் இந்தியாவுக்காக ரிங்கு சிங் அசத்துவார் என்று மற்றொரு ஜாம்பவான் சுனில் கவாஸ்கரும் சமீபத்தில் பாராட்டியிருந்தார். இதைத் தொடர்ந்து இத்தொடரின் 2வது போட்டி டிசம்பர் 12ஆம் தேதி போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement