இந்தியாவே கொண்டாடும் ஹீரோவாக தனது மகன் இருந்தும்.. பழசை மறக்காத ரிங்கு சிங்கின் தந்தை – ரசிகர்கள் நெகிழ்ச்சி

Rinku-Singh
- Advertisement -

இந்திய அணியைச் சேர்ந்த 26 வயதான உத்திரபிரதேசத்தை சேர்ந்த வீரரான ரிங்கு சிங் கடந்த 2018-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்காக அறிமுகமாகி இதுவரை 31 போட்டிகளில் விளையாடி 725 ரன்கள் குவித்துள்ளார். அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அவரது ஆட்டம் பிரமாதமாக இருந்தது பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்றது.

அதன் பலனாக கடந்த ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகிய ரிங்கு சிங் இதுவரை இரண்டு ஒருநாள் போட்டிகள் மற்றும் 15 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதிலும் குறிப்பாக டி20 போட்டிகளில் பினிஷராக பார்க்கப்படும் ரிங்கு சிங் 15 போட்டிகளில் 89 ரன்கள் சராசரியுடன் 356 ரன்கள் குவித்துள்ளார்.

- Advertisement -

அதன்காரணமாக இந்திய அணியில் கிட்டத்தட்ட நிரந்தர வாய்ப்பை பிடித்து விட்டார் என்றே பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். இப்படி ஐபிஎல் தொடரில் கலக்கிய அவர் தற்போது சர்வதேச கிரிக்கெட் தொடரிலும் தனது மிகச் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வரும் வேளையில் அவரது தந்தை இன்றளவும் கேஸ் விநியோகம் செய்து வரும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் என்கிற பகுதியைச் சேர்ந்த ரிங்கு சிங் மிகவும் ஏழ்மையான சூழலில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் தற்போது அவரது வாழ்க்கை தரம் முற்றிலுமாக மாறியுள்ளது. ஆனாலும் அவரது தந்தை இன்றளவும் பழையதை மறக்காமல் தன்னுடைய வேலையை தொடர்ந்து செய்து வருகிறார்.

- Advertisement -

ஏற்கனவே ரிங்கு சிங் அளித்த ஒரு பேட்டியில் : நான் ஐபிஎல் தொடரில் தேர்வாகி எனக்கு சம்பளம் கிடைத்த பிறகு எனது தந்தையை ஓய்வு எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினேன். ஆனால் அவர் எப்போதுமே வேலை செய்து பழகி விட்டதால் வாழ்க்கை முழுக்க இந்த வேலையை செய்யப்போவதாக கூறி தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

இதையும் படிங்க : ஆரம்பத்துலேயே சொன்னேன் கேட்கல.. இங்கிலாந்து அணியின் தவறான தேர்வை விளாசிய.. நாசர் ஹுசைன்

எனவே அவரது அந்த முடிவை நானும் தடுக்கவில்லை என்று கூறியிருந்தார். இப்படி ரிங்கு சிங் தெரிவித்திருந்த வேளையில் தற்போது உத்திரப்பிரதேச மாநிலத்தின் அலிகார் பகுதியில் ரிங்கு சிங்கின் தந்தை சிலிண்டர் டெலிவரி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement