இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இதுவரை மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ள இந்திய அணி 2 போட்டியிலும் வெற்றி பெற்று இந்த தொடரின் தற்போதைய நிலையில் இரண்டு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்திய அணியில் இருந்து விலகிய 2 வீரர்கள் :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயுள்ள எஞ்சியுள்ள மூன்று போட்டிகளானது அடுத்தடுத்து நடைபெற இருக்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி ராஜ்கோட் நகரில் 28-ஆம் தேதியும், நான்காவது டி20 புனே நகரில் 31-ம் தேதியும், ஐந்தாவது டி20 போட்டி மும்பையில் பிப்ரவரி 2-ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் இந்த டி20 தொடரின் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து முன்னணி வீரர்களான ரிங்கு சிங் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி ஆகியோர் வெளியேறியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கான காரணமும் தற்போது வெளியாகியுள்ளது.
அந்த வகையில் இரண்டாவது டி20 போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்ற ரிங்கு சிங் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி ஆகியோர் காயத்தை சந்தித்துள்ளதால் எதிர்வரும் எஞ்சியுள்ள இந்த தொடரில் இருந்து அவர்கள் இருவரும் வெளியேறி உள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் காயமடைந்துள்ள இரண்டு வீரர்களும் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று சிகிச்சை பெற்று பயிற்சி மேற்கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : திலக் வர்மாவை பாத்து அந்த விடயத்தை கத்துக்கோங்க.. போட்டிக்கு பின் பாராட்டிய – சூரியகுமார் யாதவ்
இருப்பினும் எதிர்வரும் டி20 தொடர்களில் அவர்கள் மீண்டும் உடற்தகுதியின் அடிப்படையில் இந்திய அணியில் இணைவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



