பஞ்சாப் அணியின் முக்கிய வீரரான இவர் அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் தான் – விவரம் இதோ

Gayle-1
- Advertisement -

நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல்லின் 26வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 179 ரன்கள் எடுத்து, 180 ரன்களை பெங்களூர் அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. ஆனால் பெங்களூர் அணியால் 20 ஓவர் முடிவில் 145 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இதன்மூலம் 34 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி.

gayle

- Advertisement -

அகமதாபாத் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு நன்றாக ஒத்துழைக்கும் என்பதை அறிந்து வைத்திருந்த பஞ்சாப் அணியின் கேப்டன் கே எல் ராகுல், கடந்த சில போட்டிகளாக அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட வேகப்பந்து வீச்சாளரான ரிலே மெரிடித்தை அணிக்குள் கொண்டு வந்திருந்தார். ரிலே மெரிடித்தும் பவர் ப்ளே ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி பெங்களூர் அணியின் ரன் குவிக்கும் வேகத்தை கட்டுப்படுத்தியோடு மட்டுமல்லாமல், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான தேவ்தத் படிக்கல்லையும் 4வது ஓவரிலேயே விக்கெட் எடுத்து அசத்தினார்.

இந்தப் போட்டியின் கடைசி ஓவரில் பெங்களூர் அணிக்காக பேட்டிங் செய்து கொண்டிருந்த கைல் ஜேமிசன், அந்த ஓவரின் இரண்டாவது பந்தை நேராக அடிக்க, அந்த பந்தானது அந்த ஓவரை வீசிக்கொண்டிருந்த ரிலே மெரிடித்தின் கால் முட்டியில் பட்டது. மைதானத்திலேயே வலியால் துடித்த மெரிடித், மீதமிருந்த நான்கு பந்துகளை வீச முடியாமல் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

meredith

அவருக்கு பதிலாக பஞ்சாப் அணியின் மற்றொரு வீரரான முகம்மது ஷமி மீதமிருந்த அந்த நான்கு பந்துகளை வீசினார். மைதானத்தை விட்டு வெளியே சென்ற மெரிடித்தின் காயம் எந்த அளவிள்கு இருக்கிறது என்று தெரியவில்லை. ஒருவேளை காயம் பெரிதாக இருந்தால் அவரால் இனி வரும் சில போட்டிகளில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்படும். எனவே அவருக்கு பதிலாக யாரை அணியில் எடுப்பது என்ற யோசனையில் இருக்கிறது பஞ்சாப் அணி நிர்வாகம்.

meredith 1

இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக பந்து வீசிய மெரிடித், அடுத்து வரும் போட்டிகளிலும் மிகச் சிறப்பாக பந்து வீசி பஞ்சாப் அணிக்கு வெற்றியைத் தேடித் தருவார் என்று நம்பிக்கொண்டிருந்த அந்த அணியின் ரசிகர்கள், மெரிடித் காயம் காரணமாக வெளியேறியதைப் பார்த்த பிறகு மிகுந்த சோகத்தில் இருக்கின்றனர்.

Advertisement