சஞ்சு சாம்சனை விடுங்க, 2023 உ.கோ’யில் ரிஷப் பண்ட் இடத்தில் விக்கெட் கீப்பராக அந்த 2 பேர் தகுதியானவங்க – பாண்டிங் கருத்து

Ponting
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி 50 ஓவர் உலக கோப்பை வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. வரலாற்றில் முதல் முறையாக முழுக்க முழுக்க இந்திய மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் எப்போதுமே சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியாவுக்கு 2011க்குப்பின் கோப்பையை வென்று 2013க்குப்பின் ஒரு ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்க அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் தயாராகி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் ரிசப் பண்ட் ஆரம்பத்திலேயே காயத்தால் வெளியேறியுள்ளார்.

KL Rahul 1

- Advertisement -

ஏற்கனவே வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தடுமாறினாலும் கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து மண்ணில் சதமடித்த ரிசப் பண்ட் காயத்தால் பங்கேற்க மாட்டார் என்பது இந்தியாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. எனவே நிலைமையை சமாளிப்பதற்காக முன்கூட்டியே தயாராகும் இந்திய அணி சமீப காலங்களில் ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்டு ஃபார்மை இழந்து தடுமாறி வரும் கேஎல் ராகுலை விக்கெட் கீப்பராக மிடில் ஆர்டரில் விளையாட வைத்து வருகிறது.

பாண்டிங் தேர்வு:
சொல்லப்போனால் ஓப்பனிங் இடத்தை விட மிடில் ஆர்டரில் சற்று சிறப்பாகவே விளையாடும் ராகுல் சமீபத்திய இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்களில் கடினமான பிட்ச்சில் குறைவான ஸ்கோரை துரத்தும் போது இதர வீரர்கள் தடுமாறிய போதிலும் நங்கூரமாக நின்று கிளாஸ் பேட்டிங்கை வெளிப்படுத்தி வெற்றி பெற வைத்தார். மேலும் புள்ளி விவரங்கள் அடிப்படையிலும் ஓப்பனிங் இடத்தை விட மிடில் ஆர்டரில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்துவதால் அவரே உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பராக விளையாடுவதற்கு அதிக வாய்ப்புகளும் உருவாகியுள்ளது.

Shubman Gill Ishan Kishan

ஆனாலும் பெரிய இலக்கை துரத்தும் போட்டிகளில் அதிரடியாக விளையாட திணறும் அவரால் வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியாது என்று தெரிவிக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்குமாறு கோரிக்கை வைக்கிறார்கள். இந்நிலையில் உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பர் இடத்தில் கேஎல் ராகுல் மற்றும் இசான் கிசான் ஆகியோர் விளையாடத் தகுதியானவர்கள் என ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ரிஷப் பண்ட் இல்லாத நிலைமையில் மிடில் ஆர்டரில் ஸ்பெசலிஸ்ட் இடது கை பேட்ஸ்மேனை வைத்து விளையாட இந்தியா நினைக்கலாம். அது போன்ற சமயங்களில் இசான் கிசானை 4 அல்லது 5வது இடத்தில் அவர்கள் தேர்வு செய்து வாய்ப்பு கொடுக்க வேண்டுமென்று நினைக்கிறேன். அதே சமயம் இந்தியாவின் உலகக் கோப்பை அணியில் கேஎல் ராகுல் நிச்சயமாக இருக்க வேண்டும். மேலும் இசான் கிசான் இருப்பது பேட்டிங் வரிசையில் உங்களுக்கு மற்றுமொரு இடது கை பேட்ஸ்மேன் ஆப்ஷனை கொடுக்கும். இதற்கான காரணத்தை நீங்கள் சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரின் 3வது ஒருநாள் போட்டியை பார்க்க வேண்டும்”

Ponting

“அப்போட்டியில் அஸ்டன் அகர் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்தை சுழற்றி சவாலை கொடுத்த போது அக்சர் பட்டேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை சூரியகுமாருக்கு முன்பாக இந்தியா களமிறக்கியது. உலகெங்கிலும் இருக்கும் சுழல் பந்து வீச்சாளர்களை பார்க்கும் போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வலது கை ஆஃப் ஸ்பின்னர்கள் மிகக் குறைவு என்பதால் இடது கை ஆஃப் ஸ்பின் பெற்ற அணிகளை நிராகரிக்க வேண்டும். அதை சமாளிக்க உங்களது மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் இருக்க வேண்டும்”

இதையும் படிங்க:வீடியோ : மும்பையில் பிறந்து மும்பையை வெச்சு செய்த ரகானே, ஐபிஎல் வரலாற்றில் மும்பைக்கு எதிராக இரட்டை மாஸ் சாதனை

“இப்போதெல்லாம் பெரும்பாலான அணிகளில் இடது கை ஆப் ஸ்பின் மற்றும் வலது கை லெக் ஸ்பின் இருக்கின்றன. அந்த நிலையில் உங்களது அணியில் முழுவதுமாக வலது கை பேட்ஸ்மேன்களை கொண்டிருப்பது அவர்களை எதிர்கொள்வதில் உங்களுக்கு பெரிய சிரமத்தை ஏற்படுத்தும். எனவே இந்த உலகக் கோப்பையில் இந்தியா 2 விக்கெட் கீப்பர்களை தேர்வு செய்வார்கள் என்று நினைக்கிறேன். குறிப்பாக பேட்டிங் துறையை கருத்தில் கொண்டு வந்த முடிவை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement