
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் நவம்பர் 21-ஆம் தேதி பெர்த் நகரில் துவங்ககியது. இந்த தொடருக்காக இந்திய அணி ஏற்கனவே ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டு ஆஸ்திரேலியா நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள தயாராகி வருகிறது. இந்த இந்தியா ஆஸ்திரேலியா தொடர் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஏனெனில் ஏற்கனவே சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி தழுவிய இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்ல ஆஸ்திரேலியா அணியை இந்த தொடரில் 3 அல்லது 4 போட்டிகளில் வீழ்த்தியாக வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் உள்ளது.
இதன் காரணமாக இந்த ஆஸ்திரேலிய தொடரானது இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது. இந்நிலையில் இந்த இந்தியா ஆஸ்திரேலியா தொடரில் எந்தெந்த வீரர்கள் அதிக ரன்கள் அடிப்பார்கள்? எந்தெந்த வீரர்கள் அதிக விக்கெட் எடுப்பார்கள்? என்பது குறித்த பல்வேறு கருத்துக்கள் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் இந்த தொடர் குறித்து பேசுகையில் : இந்த தொடரில் என்னை பொறுத்த வரை ரிஷப் பண்ட் அல்லது ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரில் ஒருவர் அதிக ரன்களை குவிப்பார்கள். ஏனெனில் ஸ்டீவ் ஸ்மித் தனது பழைய பேட்டிங் ஆர்டரான நான்காவது இடத்திற்கு சென்றுள்ளார். எனவே அவரது பேட்டியில் இருந்து நிறைய ரன்கள் வரும்.
அதே போன்று ரிஷப் பண்ட் ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்து வரும் வேளையில் பழைய பந்தில் அவர் எப்படி விளையாடுவார் என்று நமது அனைவருக்குமே தெரியும் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : இந்த தொடரை பொறுத்தவரை அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் வீரராக ஜாஷ் ஜேசல்வுட் இருப்பார். ஏனெனில் தற்போது அவர் தனது கிரிக்கெட் கரியரின் உச்சத்தில் இருக்கிறார்.
இதையும் படிங்க : கே.கே.ஆர் அணி 13 கோடிக்கு தக்கவைத்ததை தொடர்ந்து ரிங்கு சிங் செய்த முதல் வேலை – வாழ்த்தும் ரசிகர்கள்
அதனால் பேட் கம்மின்ஸ், ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோரை காட்டிலும் ஹேசல்வுட் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார். மிட்சல் ஸ்டார்க் இந்த தொடரின் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா? என்பது சந்தேகம்தான் அதனால் தான் ஹேசல்வுட் அதிக விக்கெட்டுகளை எடுப்பார் என்று கூறுவதாக பாண்டிங் தெரிவித்துள்ளார்.