- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சுப்மன் கில் அடுத்த 10 வருஷத்துக்கு தொடர்ந்து கேப்டனாக இருக்கனும்னா இதை செய்யனும் – ரிக்கி பாண்டிங் கருத்து

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியானது அடுத்ததாக இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. ஏற்கனவே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அனுபவ வீரரான விராத் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த வேளையில் எதிர்வரும் இந்த இங்கிலாந்து தொடரானது இந்திய அணிக்கு மிகவும் சவாலான தொடராக மாறியுள்ளது.

சுப்மன் கில் இந்த மாற்றத்தை செய்யனும் : ரிக்கி பாண்டிங்

மேலும் அனுபவ வீரர்கள் இன்றி இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இந்த தொடரில் எவ்வாறு செயல்படப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. அதோடு இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் இம்முறை பெரிய மாற்றங்கள் இருக்கும் என்பதால் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த இடத்தில் விளையாட போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக சுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனாக நீடிக்க வேண்டுமெனில் பேட்டிங் ஆர்டரில் என்ன மாற்றங்களை செய்ய வேண்டும்? என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : சுப்மன் கில்லின் வெள்ளை பந்து ஆட்டம் மிகச் சிறப்பாக இருக்கிறது.

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை அவர் முன்னேற்றம் செய்ய வேண்டிய விடயங்கள் நிறையவே தென்படுகிறது. அதிலம் குறிப்பாக அவர் தற்போது கேப்டனாக இருப்பதினால் பேட்டிங்கை பற்றி கவலைப்படாமல் இருப்பது எளிதல்ல. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டை துவக்க வீரராக ஆரம்பித்த அவர் தற்போது மூன்றாவது இடத்தில் விளையாடி வருகிறார்.

- Advertisement -

ஆனால் என்னைப் பொறுத்தவரை அவர் இனிவரும் டெஸ்ட் போட்டிகளில் நான்காவது இடத்தில் களமிறங்கி விளையாடி அதிலிருந்து கிடைக்கும் அனுபவத்தின் மூலம் மூன்றாவது இடத்திற்கு தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்படி ஒரு மாற்றத்தை செய்தால் தான் அவரால் பேட்டிங்கில் பெரிய முன்னேற்றத்தை காண முடியும். அதோடு கூடுதலாக கேப்டன் பொறுப்பையும் கையில் எடுத்து சிறப்பாக விளையாட முடியும்.

இதையும் படிங்க : 20 வருட கரியரை முடிவுக்கு கொண்டுவந்த பியூஷ் சாவ்லா.. அனைத்து வகையிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு – விவரம் இதோ

கடந்த இரண்டு ஆண்டுகளில் அவருடன் நான் ஒரு பத்து முறை பேசியிருப்பேன். அப்போது அவரிடம் பேசுகையில் கேப்டன்சி பொறுப்பு அவரை பயமுறுத்தாது என்று தோன்றியது. இருப்பினும் அவரது பேட்டிங்கில் இன்னும் முன்னேற்றம் கண்டால் மட்டுமே அவருடைய கேப்டன்சி நம்பிக்கையும் அதிகரிக்கும் என்பதனால் டெஸ்ட் போட்டிகளில் நான்காவது இடத்தில் அவர் விளையாட வேண்டும் என ரிக்கி பாண்டிங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -