ரிஷப் பண்ட் என்னோட பேவரைட் தான். ஆனாலும் அவரை விட இப்போ இவர் உச்சத்தில் இருக்காரு – பாண்டிங் கருத்து

Ponting
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் துவங்க இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் தற்போது ஆசிய கண்டத்தினை சேர்ந்த ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வரும் ஆசிய கோப்பை தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. எதிர்வரும் டி20 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு இந்த ஆசிய கோப்பை தொடரானது 20 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக நடைபெற்று வரும் வேளையில் இந்த தொடரில் இந்திய அணி இதுவரை அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்திய அணி இந்த தொடரில் தங்களது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பின்னர் அடுத்ததாக ஹாங்காங் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இப்படி அடுத்தடுத்த வெற்றிகளை தொடர்ந்து “சூப்பர் 4” சுற்றுக்கு முன்னேறியுள்ள இந்திய அணி நாளை செப்டம்பர் 4-ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக துபாய் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடரின் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடியது பெருமளவில் பேசப்பட்ட விடயமாக மாறி இருந்தது. அதோடு ஹாங்காங் அணிக்கெதிரான போட்டியில் ரிஷப் பண்ட் ஹார்டிக் பாண்டியாவிற்கு பதிலாக இடம் பெற்று இருந்தாலும் அது வெறும் கண் துடைப்புக்கு தான் என்பதால் நாளைய போட்டியிலும் ரிஷப் பண்ட் அணியிலிருந்து கழட்டி விடப்படுவார் என்று தெரிகிறது.

இந்நிலையில் இந்திய அணியில் இருந்து ரிஷப் பண்ட் நீக்கப்பட்டது குறித்து பேட்டியளித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் கூறுகையில் : ரிஷப் பண்ட் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட முடிவு எனக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது. நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் இந்திய அணியின் அந்த முடிவு என்னை வியக்க வைத்தது. அதோடு சமூக வலைதளங்களிலும் கடந்த சில நாட்களாகவே பேசப்படும் விடயமாகவும் அவரது நீக்கம் அமைந்தது.

இருந்தாலும் இந்திய அணிக்கு ஆறாவது பவுலிங் ஆப்ஷன் வேண்டும் என்பது அத்தியாவசியம். அதன் காரணமாகவே அவர்கள் அந்த முடிவினை எடுத்திருக்க வேண்டும் என்று பாண்டிங் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : நான் ரிஷப் பண்ட்டுடன் ஐபிஎல் தொடர்களின் போது மிகவும் நெருங்கி பழகியுள்ளேன். ஒரு கேப்டனாகவும், வீரராகவும் அவரிடம் உள்ள திறன்கள் பற்றி எனக்கு உண்மையிலேயே நன்றாக தெரியும். தனிப்பட்ட வகையில் அவர் மீது எனக்கு மிகப்பெரிய அபிப்பிராயம் உள்ளது.

அதோடு ஒரு நபராகவும் எனக்கு ரிஷப் பண்டை மிகவும் பிடிக்கும். என்னை பொறுத்தவரை ரிஷப் பண்ட் என்னுடைய ஃபேவரைட் பிளேயர் தான். ஆனாலும் தற்போது இந்திய அணிக்கு பேலன்ஸ் என்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் சமீபகாலமாகவே தனது மிகச் சிறப்பான ஃபார்மின் உச்சத்தில் உள்ள தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்கு ஃபினிஷராக அசத்தி வருகிறார். அதோடு பினிஷராக அவர் இடம்பெறும் வேளையில் இந்திய அணிக்கு ஆறாவது பவுலிங் ஆப்ஷன் வேண்டும் என்பதனால் ஹர்திக் பாண்டியா விளையாடுகிறார்.

இதையும் படிங்க : ஜேம்ஸ் ஆண்டர்சன் வெளியிட்ட பிடிக்காத வார்த்தைகளை கேட்டு – ஆச்சர்யமடையும் இந்திய ரசிகர்கள், காரணம் இதோ

இதன் காரணமாகவே டாப் ஆர்டரில் ஒருவர் நீக்கப்பட வேண்டும் என்கிற காரணத்தினால் ரிஷப் பண்ட் நீக்கப்படுகிறார். அதேபோன்று பின் வரிசையில் தனது பார்மின் உச்சத்தில் உள்ள தினேஷ் கார்த்திக் அவசியமானவர் என்பதனாலேயே ரிஷப் பண்ட் நீக்கப்படுகிறார் என்று பாண்டிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement