ஜேம்ஸ் ஆண்டர்சன் வெளியிட்ட பிடிக்காத வார்த்தைகளை கேட்டு – ஆச்சர்யமடையும் இந்திய ரசிகர்கள், காரணம் இதோ

James Anderson Twitter
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்து கிண்டல்களுக்கும் அவமானத்திற்கும் உள்ளான இங்கிலாந்து 2வது போட்டியில் கொதித்தெழுந்து இன்னிங்ஸ் மற்றும் 85 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. இதையடுத்து 1 – 1* (3) என்ற கணக்கில் சமனில் இருக்கும் இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி செப்டம்பர் 8ஆம் தேதியன்று லண்டன் ஓவலில் நடைபெறுகிறது. முன்னதாக மான்செஸ்டரில் நடைபெற்ற 2வது போட்டியில் இங்கிலாந்து மீண்டெழுந்து வெற்றி பெறுவதற்கு அதன் நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் 6 விக்கெட்டுகளை எடுத்து கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

கடந்த 2002இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் ஆரம்ப காலங்களில் குறிப்பாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாததால் 2015க்குப்பின் அதிலிருந்து விலகி டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த துவங்கினார். ஆரம்பம் முதலே கிரிக்கெட்டின் உயிர்நாடியான டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களையும் திணறடித்த அவர் நாட்கள் செல்ல செல்ல பழைய சரக்கை போல அனுபவத்தால் உலகமே ஆச்சரியப்படும் வகையில் இருமடங்கு அபாரமாக செயல்படத் துவங்கினார். பொதுவாக பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெறும் 35 வயதுக்குப் பின் இளம் வீரரை போல் அனுபவத்தை வைத்து விக்கெட்களை எடுக்கும் மிஷினாக உருவெடுத்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளர் என்ற ஜாம்பவான் கிளன் மெக்ராத் சாதனையை தகர்த்த புதிய சாதனை படைத்தார்.

- Advertisement -

அத்துடன் சமீபத்திய போட்டியில் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வேகப்பந்து வீச்சாளராக சாதனை படைத்த அவர் அடுத்ததாக 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உலக சாதனை படைத்துள்ள சச்சினையும் அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலர்களின் பட்டியலில் அனில் கும்ப்ளே, ஷேன் வார்னே ஆகியோரையும் முந்துவதற்கு தயாராகி வருகிறார். தற்போது 40 வயதை கடந்துள்ள இவர் 50 வயது வரை விளையாடுவேன் என்று தன்னம்பிக்கையுடன் இருப்பதால் அந்த சாதனைகளை தவிடு பொடியாக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சவாலான இந்தியா:
இதுவரை 900+ விக்கெட்டுகள் எடுத்துள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் அதில் அதிக விக்கெட்டுகளை இந்தியாவுக்கு எதிராகத் தான் எடுத்துள்ளார். அதே போல் சச்சினை அதிகமுறை அவுட் செய்த பவுலர் என்ற பெருமைக்குரிய அவருக்கு விராட் கோலி போன்ற சில இந்திய வீரர்கள் எப்போதும் சவாலாகவே இருந்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த நவீன யுகத்தில் இன்றியமையாததாக மாறியுள்ள சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டர் இணையத்தை பயன்படுத்தும் ஒருவர் தங்களுக்கு பிடிக்காத வார்த்தைகளை மியூட் அதாவது தடுத்து வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

அந்த வகையில் டுவிட்டரில் இருக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் அவரது நண்பர்கள் உங்களுக்கு பிடிக்காத மியூட் செய்து வைத்துள்ள வார்த்தைகளை வெளியிடுமாறு கேட்டனர். அதற்கு பதிலளித்த ஜேம்ஸ் ஆண்டர்சன் “பண்ட், மெக்ராத், ரிவர்ஸ், ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப்” போன்ற வார்த்தைகளை மியூட் செய்து வைத்துள்ளதாக தெரிவித்தது பெரும்பாலான ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது. குறிப்பாக முதல் வார்த்தையாக இந்திய வீரர் ரிஷப் பண்ட் இருப்பதை பார்த்து இந்திய ரசிகர்கள் ஆச்சரியமும் கலகலப்பும் அடைகிறார்கள்.

ஏனெனில் சமீப காலங்களில் ஒரு ஜாம்பவான் பவுலர் என்றும் பாராமல் டெஸ்ட் கிரிக்கெட் என்ற எண்ணமும் இல்லாமல் டி20 கிரிக்கெட்டை போல ஜேம்ஸ் ஆண்டர்சனை அசால்டாக ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் வாயிலாக ரிஷப் பண்ட் பவுண்டரிகளாக பறக்கவிட்டிருந்தார். இளம் கன்று பயமறியாது என்ற வகையில் சீறிப்பாய்ந்த அவரது ஆட்டம் ரசிகர்களின் மனதில் இப்போதும் நிற்கும் நிலையில் அதனால் நிறைய முறை அவரது பெயரைக் குறிப்பிட்டு ஜேம்ஸ் ஆண்டர்சனின் ட்விட்டரில் பெரும்பாலான ரசிகர்கள் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

இதையும் படிங்க : இளம் இந்திய வீரர்கள் சச்சினை பின்பற்றாமல் தோனியை பின்பற்றி கெட்டுப்போறாங்க – முன்னாள் பாக் வீரர் கவலை

அதனாலேயே அதற்கு முற்றுப்புள்ளி வைக்க பண்ட், ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் போன்ற வார்த்தைகளை அவர் மியூட் செய்துள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. அதேபோல் என்னதான் கிளன் மெக்ராத் ஜாம்பவானாக இருந்தாலும் பரம எதிரியான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் என்பதால் சமீபத்தில் அவரை முந்தி சாதனை படைக்கும் போது அவரது பெயரை பார்க்க விரும்பாததாலேயே மியூட் செய்துள்ளார் என்றும் தெரிகிறது.

Advertisement