மும்பை இந்தியன்ஸ் அணியில் இவர் படு டேஞ்சர் பேட்ஸ்மேன் – ரிக்கி பாண்டிங் ஓபன் டாக்

Ponting

பல்வேறு இன்னல்களை கடந்து இந்த வருட ஐபிஎல் தொடர் பதிமூன்றாவது சீசனாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று உறுதி ஆகி உள்ளது. எனவே இந்தத்தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரை காண அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ipl

இந்நிலையில் இந்த தொடர் குறித்து ஒவ்வொரு அணியின் பயிற்சியாளர்கள், வீரர்கள், முன்னாள் வீரர்கள் கிரிக்கெட், விமர்சகர்கள் என பலரும் தங்களது கருத்துக்களை ஓப்பனாக பேசிவருகின்றனர். அதேபோல் சில கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் நிபுணர்கள் ஆகியோர் இந்த தொடர் குறித்த தங்களது கணிப்புகளையும் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள அபாயகரமான வீரர் யார் என்பது குறித்து தனது கருத்தினை அறிவித்து உள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில் : மும்பை இந்தியன்ஸ் அணியில் “ரோகித் சர்மாவை” விட அபாயகரமான வீரராக மற்ற யாரும் இருக்க முடியாது என்றார்.

Rohith

ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இருக்கும் ரோகித் சர்மா 5 முறை கோப்பையை கைப்பற்ற உதவியது குறிபிடத்தக்கது. அதில் நான்கு முறை கேப்டனாக அவர் கோப்பையை பெற்றுக் கொடுத்துள்ளார் என்றும் கூறியுள்ளார். 2009 ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிய போது அந்த அணி கோப்பையை வென்றது. அதன் பிறகு நான்கு முறை மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை வகித்து அவர் கோப்பையை கைப்பற்றி கொடுத்துள்ளார்.

- Advertisement -

Rohith-1

188 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4898 ரன்களை அடித்துள்ளார். இதில் 36 அரைசதங்களை அவர் விளாசியுள்ளார். 2014ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடக்கும்போது மும்பை இந்தியன்ஸ் விளையாடிய ஐந்து போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தத்தொடர் முழுவதும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.