ஜடேஜாவின் இடத்தை இந்திய அணியில் அடுத்து நிரப்பப்போவது இவர்தான். இளம்வீரரை பாராட்டிய ரிக்கி பாண்டிங்

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது பரபரப்புக்கு சற்றும் பஞ்சமின்றி சுவாரசியமாக நடைபெற்று முடிந்தது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்பானது நடைபெற உள்ளது.

IND vs AUS

இந்நிலையில் இந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் பேட்டிங்கில் 220 ரன்களையும் பந்துவீச்சில் 47 விக்கெட்டுகளையும் கைப்பற்றியதால் இவர்கள் இருவருக்குமே தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. ஆனால் இந்த தொடரில் சத்தமே இல்லாமல் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்சர் பட்டேலும் கவனிக்க கூடியவர்.

- Advertisement -

ஏனெனில் இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறிய போதெல்லாம் பின்வரிசையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்சர் பட்டேல் மறைமுகமாக இந்திய அணிக்கு சத்தம் இல்லாமல் உதவி செய்தார் என்று கூறவேண்டும். ஏனெனில் டாப் ஆர்டர் வீரர்கள் பாட்னர்ஷிப் அமைக்க தவறியிருந்த போதும் அக்சர் பட்டேல் பின் வரிசையில் மிகச் சிறப்பாக விளையாடி இந்திய அணியை தனது அற்புதமான பேட்டிங் மூலம் கரை சேர்த்தார்.

Axar Patel 1

குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் இந்த டெஸ்ட் தொடரில் கவஜா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிக ரன்களை அடித்த மூன்றாவது வீரராக அக்சர் பட்டேல் 264 ரன்களுடன் இருக்கிறார். இந்நிலையில் அக்சர் பட்டேலை தான் பல ஆண்டு காலமாக பார்த்து வருவதாகவும் அவரிடம் இருந்த பிரச்சனை நீங்கி தற்போது அவர் மிகச் சிறப்பாக விளையாடுகிறார் என்றும் ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த போதிலிருந்தே அக்சர் பட்டேலை எனக்கு நன்றாக தெரியும். அப்போதெல்லாம் அவருக்கு ஷார்ட் பிட்ச் பந்துகளில் பிரச்சனை இருந்தது. ஆனாலும் அவரிடம் நல்ல பேட்டிங் டெக்னிக் இருந்தது. முன்பெல்லாம் அவர் பேட்டிங்கில் பெரிய அளவில் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் தற்போது தனது பேட்டிங் திறனை நன்றாக வளர்த்துக் கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க : IND vs AUS : ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் – பிளேயிங் லெவன் இதோ

குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் அவர் அற்புதமாக விளையாடுகிறார். இன்னும் இவரை நிறைய உள்ளூர் டெஸ்ட் போட்டிகள் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் கவுண்டி போட்டிகளில் விளையாட வைத்தால் இனி வரும் காலங்களில் இந்திய அணியில் ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தை கச்சிதமாக பிடித்துக் கொள்வார் என பாண்டிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement