IND vs AUS : ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் – பிளேயிங் லெவன் இதோ

Hardik-Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1)என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

IND vs AUS

- Advertisement -

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியானது நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்கவில்லை என்பதனால் ஹர்திக் பாண்டியாவின் தலைமையிலான இந்திய அணியே இந்த முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்க்கிறது.

இந்நிலையில் இந்த முதலாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவருக்கும் மத்தியில் உள்ளது. இந்நிலையில் அந்த வகையில் முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பட்டியலை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி துவக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்குவது உறுதி.

Ishan-Kishan

அதோடு மூன்றாவது வீரராக விராட் கோலியும், நான்காவது வீரராக சூரியகுமார் யாதவும் விளையாடுவார்கள். அவர்களை அடுத்து மிடில் ஆர்டரில் ஐந்தாவது வீரராக கே.எல் ராகுலும், ஆறாவதாக கேப்டன் ஹார்டிக் பாண்டியாவும், ஏழாவது வீரராக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் விளையாடுவார்கள்.

- Advertisement -

அவர்களை தவிர்த்து பந்துவீச்சாளர்களாக வாஷிங்டன் சுந்தர் அல்லது ஷர்துல் தாகூர் இருவரில் ஒருவர் எட்டாவது வீரராக இடம்பெறுவது உறுதி. மேலும் ஒன்பதாவது வீரராக முகமது ஷமியும், பத்தாவது வீரராக முகமது சிராஜும், 11 ஆவது வீரராக குல்தீப் யாதவ் அல்லது சாஹல் ஆகிய இருவரில் ஒருவர் விளையாடுவது உறுதி. அந்த வகையில் முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : ஐபிஎல் 2023 : பும்ரா இல்லைனாலும் அவர துருப்பு சீட்டா பயன்படுத்தி ரோஹித் 6வது கோப்பை ஜெயிப்பாரு – கவாஸ்கர் நம்பிக்கை

1) சுப்மன் கில், 2) இஷான் கிஷன், 3) விராட் கோலி, 4) சூரியகுமார் யாதவ், 5) கே.எல் ராகுல், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) வாஷிங்க்டன் சுந்தர்/ஷர்துல் தாகூர், 9) முகமது ஷமி, 10) முகமது சிராஜ், 12) குல்தீப் யாதவ் / யுஸ்வேந்திர சாஹல்.

Advertisement