நடப்பு ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. டெல்லி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 53 ரன்கள் குவித்தார்.
அதனைத் தொடர்ந்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியும் 20 ஓவர்களின் முடிவில் 157 ரன்கள் அடித்து போட்டி “டை” ஆனது. அதிகபட்சமாக துவக்க வீரர் மயங்க் அகர்வால் 89 ரன்களை குவித்தார். சூப்பர் ஓவர் முடிவின் மூலம் டெல்லி அணி இந்த போட்டியில் அபார வெற்றி பெற்றது.
பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் இந்த வெற்றி குறித்து சில சர்ச்சையும் இருந்துவருகின்றன. இந்நிலையில் இந்தப் போட்டியில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆறாவது வரை சிறப்பாக வீசினார். ஒரு ஓவர் வீசிய அஸ்வின் 2 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இருப்பினும் அந்த ஓவரின் கடைசி பந்தில் மேக்ஸ்வெல் அடித்த ஷாட்டை பிடிக்க முயன்று கீழே விழுந்து தோள்பட்டையில் காயம் அடைந்த அவர் உடனே வலியில் துடித்தார். உடனே மருத்துவ உதவியாளர் மைதானத்திற்குள் வந்து கட்டுப்போட்டு அழைத்துச் சென்றார். அவர் வெளியேறிய பிறகு மீண்டும் அவர் பந்து வீச வரவே இல்லை. இதனால் அடுத்த போட்டியில் அஸ்வின் விளையாடுவாரா ? மாட்டாரா ? என்ற சந்தேகம் அனைவரிடமும் இருந்தது.
Still buzzing the morning after! Thrilled with the way we fought back after our start, @MStoinis with both bat and ball and @KagisoRabada25 with a quality super over.
We’ll find out more about @ashwinravi99‘s injury soon and hopefully he’s ok to play against the Super Kings. https://t.co/MxljKCqqYx
— Ricky Ponting AO (@RickyPonting) September 21, 2020
கடைசியாக முடிந்த போட்டியில் ஸ்டாய்னிஸ் சிறப்பாக பேட்டிங் செய்தார். மேலும் ரபாடா சிறப்பாக பவுலிங் செய்தார். அஷ்வினின் காயம் பெரிய அளவில் இல்லை அவர் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என்று பாண்டிங் பதிவிட்டுள்ளார்.