இந்திய கிரிக்கெட் அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்து நடைபெறும் இங்கிலாந்து தொடரில் அவருடைய தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி களமிறங்குகிறது. அந்தத் தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட வேண்டுமெனில் கேப்டனாக சுப்மன் கில் சிறப்பாக பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது அவசியமாகிறது.
ஆனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் அவர் கடந்தக் காலங்களில் சிறப்பாக விளையாடியதில்லை. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலில் திடமான தடுப்பாட்ட (ஃடிபன்ஸ்) டெக்னிக் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆனால் வெளிநாட்டு போட்டிகளில் பலமுறை அவருடைய தடுப்பாட்டம் தகர்க்கப்பட்டுள்ளது.
சேவாக் போல:
எனவே சுப்மன் கில் முதலில் பிளேயிங் லெவனில் இருப்பதற்கே பொருத்தமற்றவர் என்று சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். இந்நிலையில் நல்ல தடுப்பாட்ட டெக்னிக் இல்லையென்றாலும் வீரேந்திர சேவாக் போல தன்னம்பிக்கையுடன் அதிரடியாக விளையாடினால் சுப்மன் கில் இங்கிலாந்தில் அசத்த முடியும் என்று ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“சிறந்த தடுப்பாட்டம் இல்லாமலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்திய சில மாகத்தான் வீரர்கள் இருக்கிறார்கள். வீரேந்திர சேவாக் அதற்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. அவரைப்போல நீங்கள் உங்களுடைய ஸ்ட்ரோக் பிளேவை கட்டுப்பாட்டுடன் வைத்திருந்தால் தடுப்பாட்டத்தை பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. கண்டிப்பாக தடுப்பாட்டம் என்பது டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய அங்கமாகும்”
பாண்டிங் அட்வைஸ்:
“அவை அனைத்தும் மனநிலையைப் பற்றிய பயன்பாடாக இருக்கும் என்று நினைக்கிறேன். சில நேரங்களில் நீங்கள் உங்களுக்கு நீங்களே முன்னோக்கிச் சென்றிருப்பீர்கள் வேண்டும் அல்லது ஒரு டெஸ்ட் இன்னிங்ஸின் பாதியில் கொஞ்சம் சோம்பலுடன் இருப்பீர்கள். இருப்பினும் அதை நீங்கள் செய்ய விரும்ப மாட்டீர்கள். நீங்கள் எதிர்கொள்ளும் 6 – 7 மணி நேரங்களில் சந்திக்கும் ஒவ்வொரு பந்திலும் 100% அர்ப்பணிப்பை காட்ட வேண்டும்”
இதையும் படிங்க: ஸ்ரேயாஸ் ஐயர் இப்போ இந்தியாவின் கேப்டனா வந்தா எதிர்ப்பேன்.. இதான் காரணம்.. சுனில் கவாஸ்கர் பேட்டி
“அதுவே சுப்மன் கில்லுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார். முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டை டி20 போல விளையாடிய வீரேந்திர சேவாக் பெரும்பாலும் தடுப்பாட்டத்தை விளையாட மாட்டார். தம்மிடம் இயற்கையாகவே இருந்த அதிரடியை வைத்து அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவானாக ஜோலித்தார். மறுபுறம் சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை ஒருமுறை கூட அதிரடியாக விளையாடியதில்லை. எனவே வீரேந்திர சேவாக் கூட ஸ்ட்ரோக் பிளேவை வைத்து அவரால் இங்கிலாந்து மண்ணில் சாதிக்க முடியுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.



