இந்திய அணியிடம் கண்டிப்பா தென்னாப்பிரிக்கா அணி தோக்கும்.. காரணம் இதுதான் – ரிக்கி பாண்டிங் கருத்து

Ricky Ponting IND vs RSA
- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் நடப்பு 2026 டி20 உலக கோப்பை தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வந்த வேளையில் தற்போது 12 அணிகள் வெளியேற்றப்பட்டு எட்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதன் காரணமாக நாளையில் இருந்து சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன.

தென்னாப்பிரிக்க அணியை இந்திய அணி வீழ்த்தும் : ரிக்கி பாண்டிங்

இந்த 8 அணிகளில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்? எந்த இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாம்பியன் பட்டத்திற்கு போட்டியிடப்போகிறது? என்கிற எதிர்பார்ப்புகள் அனைவரது மத்தியிலும் நிலவி வருகின்றன. இந்த உலகக் கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்றிருக்கும் இந்திய அணிக்கு கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக பெரும்பாலானோர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் எதிர்வரும் இன்று சூப்பர் 8 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை வெகு எளிதாக இந்திய அணி வீழ்த்தும் என்றும் அதற்கு இரண்டு வீரர்கள் முக்கிய காரணமாக இருப்பார்கள் என்றும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : தற்போதைய தென்னாப்பிரிக்க அணியிடம் சிறந்த பௌலிங் இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் இந்திய அணியில் மரபு சாராத இரண்டு பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.

குறிப்பாக வித்தியாசமான பௌலிங் ஆக்சன் கொண்ட பும்ராவின் பந்துவீச்சு தென்னாப்பிரிக்க அணிக்கு அச்சுறுத்தும் வகையில் இருக்கும். அவரால் போட்டியின் ஆரம்பத்திலும் சரி, மிடில் ஓவர்களிலும் சரி, கடைசி கட்ட ஓவர்களிலும் சரி எந்த நேரத்திலும் பந்துவீச முடிகிறது. அதோடு அவரால் எந்த நேரத்திலும் விக்கெட்டுகளையும் வீழ்த்த முடிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : இந்தியா டி20 உலககோப்பையை வென்றால் இவருக்கு தான் தொடர்நாயகன் விருதை கொடுக்கனும் – சீக்கா கருத்து

அதுமட்டுமின்றி இரண்டாவதாக அவர்களிடம் மிஸ்டரி சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி இருக்கிறார். வலதுகை, இடதுகை என எந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் சரி அவர்களுக்கு எதிராக சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை கைப்பற்றி வருகிறார். அவருக்கு எதிராக ரன் குவிப்பதும் சிரமமாக இருந்து வருவதால் இந்த ஒரு முன்னிலை இந்திய அணியிடம் இருக்கிறது என ரிக்கி பாண்டிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement