மிட்சல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பி பிரிவில் இடம் பெற்று விளையாடி வருகிறது. பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த தொடரின் தற்போதைய நிலையில் 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஆஸ்திரேலிய அணி 2 தோல்விகளை சந்தித்து ஏற்கனவே இந்த உலக கோப்பை தொடரிலிருந்து வெளியேறிவிட்டது.
கிளென் மேக்ஸ்வெல்லின் கரியர் முடிந்து விட்டது : ரிக்கி பாண்டிங்
ஆனாலும் லீக் சுற்று போட்டியில் எஞ்சியுள்ள கடைசி ஆட்டத்தில் இன்று ஓமன் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு ஆஸ்திரேலியா அணி தகுதி பெறாது என்பதனால் இந்த போட்டியே இந்த உலக கோப்பை தொடரில் அவர்களது கடைசி ஆட்டமாக மாறியுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் இந்த மோசமான செயல்பாடு குறித்து பல்வேறு விமர்சனங்களை முன் வைத்துள்ள அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கிளென் மேக்ஸ்வெல்லையும் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
இந்த உலக கோப்பை தொடங்குவதற்கு முன்னதாகவே பல்வேறு வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டதால் ஆஸ்திரேலிய அணி பின்னடைவை சந்தித்தது. அதேபோன்று முக்கிய வீரர்களின் ஆட்டமும் இந்த தொடரில் சிறப்பாக இல்லை என்பதால் லீக் சுற்று முடிவிலேயே ஆஸ்திரேலிய அணி வெளியேறியிருக்கிறது. இந்த உலக கோப்பை தொடருக்குள் ஆஸ்திரேலிய அணி வரும்போதே வெற்றி பெறக்கூடிய அணியாக எனக்கு இந்த அணி தெரியவில்லை.
இதையும் படிங்க : வரலாற்று சாதனையுடன் இலங்கை அணியை வீழ்த்தி அசத்திய ஜிம்பாப்வே அணி – விவரம் இதோ
எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் மேக்ஸ்வெல் இருக்க மாட்டார். எனவே அவரது கிரிக்கெட் கரியர் முடிவுக்கு வருவது போல் எனக்கு தோன்றுகிறது. அவரை தவிர்த்து மிட்சல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், ஜாஷ் இங்கிலீஷ் அடுத்த உலக கோப்பையில் நிச்சயம் இருப்பார்கள். மேலும் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் இடமும் கேள்விக்குறிதான் என ரிக்கி பாண்டிங் கூறியது குறிப்பிடத்தக்கது.



