- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தற்போதைய இந்திய டி20 அணிதான்.. பெஸ்ட் எவர் டி20 அணி.. அதை யாராலும் மறுக்க முடியாது – பாண்டிங் பாராட்டு

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று முடிந்த 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. ஏற்கனவே 2024 ஆம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருந்த வேளையில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணி இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்று இருந்தது.

இந்திய டி20 அணி மிகச்சிறந்த அணி : பாண்டிங் பாராட்டு

இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே பலரும் இந்திய அணியே இந்த உலக கோப்பையை கைப்பற்றும் என்று கருத்து தெரிவித்திருந்த வேளையில் அதன்படியே பலமான அணியாக திகழ்ந்த சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணியானது சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக மட்டுமே தோல்வியை சந்தித்திருந்தது.

- Advertisement -

மற்றபடி தாங்கள் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதியாக நியூசிலாந்து அணியையும் வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இதன் மூலம் அடுத்தடுத்த டி20 உலக கோப்பை தொடர்களை வென்ற முதல் அணியாகவும், அதிகமுறை டி20 உலக கோப்பையை வென்ற அணியாகவும் இந்திய அணி இரட்டை சாதனையை நிகழ்த்தி இருந்தது.

இப்படி இந்திய அணி பெற்ற இந்த வெற்றிக்கு பலரது மத்தியில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வரும் வேளையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் ஜாம்பவான் கேப்டனான ரிக்கி பாண்டிங் தற்போதைய இந்திய டி20 அணி தான் மிகச்சிறந்த டி20 அணி என தனது பாராட்டினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : தற்போதைய இந்திய டி20 அணியை நான் வரலாற்றின் மிகச்சிறந்த டி20 அணி என்று கூறுவேன். அதை யாராலும் மறுக்க முடியாது.

- Advertisement -

ஏனெனில் தற்போதுள்ள இந்திய டி20 அணியில் இடம் பெற்றுள்ள அனைவருமே மேட்ச் வின்னர்கள் தான். அதனால் இந்த அணியை மிகச்சிறந்த அணியாக பார்க்கிறேன். டி20 கிரிக்கெட் மட்டுமல்லாமல் கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளாகவே ஐசிசி தொடர்களில் இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணி மிகச் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறது. இந்திய அணியின் இந்த அசைக்க முடியாத ஆதிக்கத்திற்கு காரணமே ஐபிஎல் என்று தான் பார்க்கிறேன்.

இதையும் படிங்க : சன் ரைசர்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படவுள்ள இஷான் கிஷன்.. என்ன காரணம்? – விவரம் இதோ

ஏனெனில் சர்வதேச கிரிக்கெட் போட்டி போன்றே ஐபிஎல் போட்டிகளிலும் நல்ல போட்டி நிலவுகிறது. அழுத்தம் மிகுந்த அந்த போட்டிகளில் விளையாடி இந்திய வீரர்கள் அனுபவம் பெறுவதாலே சர்வதேச கிரிக்கெட்டிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த முடிகிறது என பாண்டிங் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -