- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அர்ஷ்தீப் சிங்கிடம் அந்த திறமை இருக்கு.. அவருக்கு அறிமுக வாய்ப்பு தாங்க – ஆதரவு தெரிவித்த ரிக்கி பாண்டிங்

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட மிகப்பெரிய டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் இங்கிலாந்து நாட்டிற்கும் பயணித்துவிட்டது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியானது ஜூன் 20-ஆம் தேதி லண்டன் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இங்கிலாந்து தொடரில் அர்ஷ்தீப் சிங் ஆடனும் : ரிக்கி பாண்டிங்

இந்த தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி முன்கூட்டியே அங்கு சென்று பயிற்சியிலும் பங்கேற்க இருக்கிறது. இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் போன்ற ஜாம்பவான் வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களை கொண்ட அணியே விளையாடுவதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -

அதேவேளையில் இளம் வீரர்களை கொண்ட இந்த இந்திய அணிக்கு இந்த தொடர் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் இந்த டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் பல்வேறு புதிய மாற்றங்கள் இருக்கும் என்றும் தெரிகிறது. இந்நிலையில் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அப்படி வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அது தனக்கு ஆச்சரியமாக இருக்கும் என்றும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ஏற்கனவே இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாவதற்கு இதுவே சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் ஸ்விங் பந்து வீசுவதில் திறமை வாய்ந்த அர்ஷ்தீப் சிங் இங்கிலாந்து ஆடுகளத்தில் மிகச் சிறப்பாக செயல்படுவார் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

அதுமட்டும் இன்றி அவர் ஏற்கனவே கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி உள்ளதால் அந்த அனுபவமும் டியூக் பந்துகளை வீச கைகொடுக்கும். 6 அடி உயரத்திற்கு மேல் உள்ள அவரால் இங்கிலாந்து ஆடுகளத்தில் பந்தினை ஸ்விங் செய்து வீசமுடியும் என்பதனால் நிச்சயம் அவரால் இந்த தொடரில் பிரமாதமான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியும் என ரிக்கி பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரர்களாக அந்த 2 பேரும் தான் விளையாடனும் – ரிக்கி பாண்டிங் கருத்து

இந்திய அணிக்காக கடந்த 2022-ஆம் ஆண்டு அறிமுகமான அவர் இதுவரை 63 டி20 போட்டிகளில் விளையாடி 99 விக்கெட்டுகளையும், 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அவர் விளையாடியிருந்தாலும் இதுவரை அவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -