கேப்டன்சியில் கோலி, வில்லியம்சன் கலந்த கலவை இவர். இந்திய இளம் வீரரை பாராட்டிய – ரிக்கி பாண்டிங்

Ponting
- Advertisement -

டெல்லி அணிக்காக இந்த ஆண்டு புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரின் இடது கை தோள்பட்டை காயம் அடைந்தது. இதன் காரணமாக அவரால் இந்த ஆண்டு நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் போனது. எனவே ரிஷப் பண்ட் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். தனது முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் தனது தலைமையின் கீழ் முதல் வெற்றியை முத்திரை பதித்துக் கொண்டார் ரிஷப் பண்ட்.

- Advertisement -

ரிஷப் பண்ட் இன் கேப்டன்சி குறித்து டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தற்போது ஒரு சில வார்த்தைகளை கூறி உள்ளார். இது குறித்து பேசிய ரிக்கி பாண்டிங் கூறியதாவது : ரிஷப் பண்ட் பேட்டியில் தன்னுடைய பேட்டிங் திறமையை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறார்.

அது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அவர் கேப்டனாகவும் தற்பொழுது என்னை ஆச்சரிய படுத்துகிறார். நான் நினைத்ததை விட மிக சிறப்பாக அணியை தலைமை தாங்கி முன்னெடுத்துச் செல்கிறார் என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். ரிஷப் பண்ட் ஒரு புத்திசாலி அவருக்கு அணியை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்று நன்றாகத் தெரிந்திருக்கிறது.

இப்படிப்பட்ட இக்கட்டான நிலையிலும் மிகக் கூலாக சிந்தனைகளை வகுத்து, அணிக்கு நம்பிக்கை அளித்து வருகிறார். மேலும் பேசிய பாண்டிங் ரிஷப் பண்ட் கேப்டன்சி விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன் போல உள்ளதாகவும் கூறியுள்ளார். நிச்சயமாக இந்த தொடர் முழுவதும் டெல்லி அணியை மிக சிறப்பாக வழிநடத்திச் சென்று பல வெற்றிகளை ரிஷப் பண்ட் பெற்றுத் தருவார் என்று இறுதியாக ரிக்கி பாண்டிங் கூறி முடித்தார்.

pant-2

இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

Advertisement