அவரோட கரியரே ஓவர்னு நெனச்சேன். ஆனா இப்போ – தமிழக வீரரை புகழ்ந்த ரிக்கி பாண்டிங்

Ponting
- Advertisement -

கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி துவங்கிய டி20 உலக கோப்பை தொடரானது தற்போது சூப்பர் 12 சுற்றினை எட்டியுள்ளது. இந்த தொடரின் தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இன்று முதல் சூப்பர் 12 போட்டிகள் நடைபெற உள்ளதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறி உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் கோப்பையை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் இந்திய அணியானது நாளை பாகிஸ்தான் அணிக்கு எதிராக மோத இருக்கிறது.

INDIA Arshdeep Singh Harshal Patel

இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறப் போகும் வீரர்கள் யார் யார் என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சசத்தில் உள்ளது. இந்நிலையில் நிச்சயம் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் பினிஷர் ரோலில் களமிறங்குவது உறுதியாகியுள்ளது.

சமீப காலமாகவே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தினேஷ் கார்த்திக் நிச்சயம் இந்திய அணியின் ஒரு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறார். இந்நிலையில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

DInesh Karthik

ஐபிஎல் தொடரின் போது கொல்கத்தா அணி அவரை கழற்றிவிட்டதும் அவருடைய கிரிக்கெட் கரியரே முடிந்தது என்று நினைத்தேன். ஆனால் அதன் பின்னும் தனது விடாமுயற்சியின் மூலம் மீண்டும் ஒரு பினிஷராக பெங்களூரு அணியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.

அவர் இப்படி மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று நான் சற்றும் நினைக்கவில்லை. கொல்கத்தா அணியில் இருந்து கழற்றி விடப்பட்டதால் அவருடைய கிரிக்கெட் நேரம் முடிவுக்கு வந்ததாக நினைத்தேன். ஆனால் இன்று அவர் இல்லாமல் இந்திய அணி விளையாடாது என்கிற நிலையை தினேஷ் கார்த்திக் தனது சிறப்பான ஆட்டத்தால் உருவாக்கியுள்ளார்.

இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பை : எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க. கண் கலங்கிய – நிக்கோலஸ் பூரன்

இந்திய வீரர்களிடம் பிடித்த ஒன்றே விடாமுயற்சி தான். அந்த வகையில் தினேஷ் கார்த்திக் இந்த 37 வயதில் அவர் கொடுத்த கம்பேக் என்பது சாதாரண விடயம் கிடையாது என ரிக்கி பாண்டிங் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement