டி20 உலகக்கோப்பை : எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க. கண் கலங்கிய – நிக்கோலஸ் பூரன்

Nicholas-Pooran
- Advertisement -

டி20 உலக கோப்பை தகுதிச்சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்த வேளையில் அடுத்ததாக தற்போது சூப்பர் 12 சுற்றானது இன்று முதல் துவங்க உள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற முக்கியமான தகுதிச்சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது சூப்பர் 12 சுற்றிற்கு முன்னேற முடியாமல் இந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறியது.

Jason-Holder

- Advertisement -

டி20 கிரிக்கெட் வரலாற்றில் இருமுறை சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இம்முறை ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முதல் சுற்றோடு வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் கூறுகையில் : ரசிகர்களை நான் மிகவும் ஏமாற்றி விட்டேன். எனக்கும் இந்த தோல்வி தனிப்பட்ட முறையில் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் எங்கள் ரசிகர்களையும் எங்களையும் ஏமாற்றி விட்டோம்.

Paul Sterling

இந்த தோல்வி எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. நான் தனிப்பட்ட முறையில் எனது மோசமான ஆட்டத்தால் சகவீரர்களையும் ஏமாற்றி விட்டேன். இந்த உலகக் கோப்பையில் எங்களது அணியின் பேட்டிங் செயல்பாடு திருப்தி இல்லை. இது போன்ற மைதானத்தில் 145 ரன்கள் எடுத்தால் எதிரணியை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்.

- Advertisement -

பந்துவீச்சாளர்களுக்கும் அது கூடுதல் சுமையை தரும். அந்த வகையில் இந்த தொடர் முழுவதுமே எங்களது பேட்டிங் சரியில்லாத காரணத்தினாலேயே தோல்வியை சந்தித்தோம் என கண் கலங்கியவாறு நிக்கோலஸ் பூரன் தோல்வி குறித்த காரணத்தை கூறியது மட்டும் இன்றி ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டார்.

இதையும் படிங்க : டி20 உலக கோப்பை வரலாற்றில் மறக்க முடியாத 5 சர்ச்சை நிகழ்வுகள் – வித்யாசமான பதிவு

மேலும் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறிய அயர்லாந்து அணிக்கு பாராட்டினை தெரிவித்த அவர் : அயர்லாந்து அணி பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டது. அவர்களின் அடுத்த அடுத்த போட்டிகளில் வெற்றிபெற அவர்களுக்கு வாழ்த்துக்கள் என நிக்கோலஸ் பூரன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement