கிரிக்கெட்டின் ஆல் டைம் தலைசிறந்த 3 பீல்டர்கள் இவர்கள் தான் – ரிக்கி பாண்டிங் தேர்வு

Ponting

கிரிக்கெட்டில் எப்படி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகியவற்றினை வைத்து வெற்றி பெற முடியுமோ அதே போல் பீல்டிங்கையும் வைத்து வெற்றி பெறமுடியும். ஏனெனில் ஒரு சில நேரத்தில் அசாத்தியமான பீல்டிங் மூலம் பிடிக்கப்படும் கேட்ச்கள் மற்றும் ரன் அவுட் போன்றவைகள் மூலம் போட்டியின் முடிவே மாறியிருப்பதை நாம் பல போட்டிகளில் கண்டிருக்கிறோம்.

முதன்முதலில் தென்னாப்பிரிக்காவின் ஜான்டி ரோட்ஸ் 90களின் காலகட்டத்தில் இதனை செய்து காட்டினார். அதனை தொடர்ந்து ஒவ்வொரு அணியிலும் பீல்டிங்கில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் இருந்தே வருகின்றனர். அவர்களின் திறமை சர்வதேச போட்டிகளில் தனியாக கவனிக்கப்பட்டும் வருகின்றன.

அந்தவகையில் இந்தியாவில் முகமது கைஃப், யுவராஜ்சிங், ஆஸ்திரேலியாவில் ரிக்கி பாண்டிங் ஆன்ட்ரு சைமன்ஸ், தென்னாப்பிரிக்காவில் கிப்ஸ் போன்ற பல வீரர்கள் இருந்தனர். சரியான நேரத்தில் ஒரு கேட்ச் பிடித்த அல்லது அசாத்தியமாக ஒரு ரன் அவுட் செய்தோ, அல்லது 30 ரன்கள் ஆடுகளத்தில் தடுத்து வெற்றி பெற வைக்க முடியும்..

symonds

இப்படி இருக்க பேட்டிங்கில் மட்டுமல்லாது பீல்டிங்கில் அவரது காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்கிடம் ரசிகர் ஒருவர் மிகச் சிறந்த மூன்று பீல்டர்களை தேர்வு செய்ய கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த பாண்டிங் தனது அணியில் ஆடிய ஒருவரையும், தென்னாப்பிரிக்க வீரர் இருவரையும் தேர்வு செய்துள்ளார்.

- Advertisement -

அந்தவகையில் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் தற்போது ஆடிக்கொண்டிருக்கும் தென் ஆப்பிரிக்காவின் அதிரடி வீரர் ஏபி டி வில்லியர்ஸ் அதன் பின்னர் இதற்கெல்லாம் விதை போட்ட ஜான்டி ரோட்ஸ் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார்.மேலும் மூவரையும் திறமையின் வரிசையிலும் வரிசை படுத்தினார்.

Raina

அதில் ஆண்ட்ரூ சைமண்ட்சுக்கு முதலிடத்தையும், ஏபி டிவிலியர்சுக்கு இரண்டாவது இடத்தையும் பீல்டிங் ஜாம்பவானான ஜான்டி ரோடசுக்கு மூன்றாவது இடத்தையும் கொடுத்துள்ளார். இதில் இந்திய வீரர்களான விராட் கோலி ,ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் என யார் பெயரையும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.