ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை 4 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாட உள்ளது. ஏனெனில் சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் தோற்ற இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்ல ஆஸ்திரேலியாவில் 4 போட்டிகளை வெல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் புஜாரா இல்லாதது இம்முறை இந்திய கிரிக்கெட் அணிக்கு பெரிய இழப்பு என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
ஏனெனில் கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களையும் இந்தியா வெல்வதற்கு புஜாரா முக்கிய பங்காற்றினார். ஆனால் அவரைப் போல் நங்கூரமாக விளையாடும் ஸ்டைலை கொண்ட பேட்ஸ்மேன்கள் தற்போதைய இந்திய அணியில் இல்லை. அதே போல கடந்த தொடரில் 36க்கு ஆல் அவுட்டாகி மோசமான தோல்வியை சந்தித்த இந்தியா அதற்காக அடங்காமல் கடைசியில் 2 – 1 (4) என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவில் தொடரை வென்றது.
புஜாரா மாதிரி வீரர்:
எனவே இம்முறை இந்தியாவை வீழ்த்த முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியா வலுவாக வெற்றி பெறுவது அவசியம் என்று பாண்டிங் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த காலங்களில் இந்திய அணி ஆஸ்திரேலியாலில் வெற்றி பெறுவதற்கு புஜாரா மிகப்பெரிய பங்காற்றினார். அவர் நீண்ட நேரம் பேட்டிங் செய்து ஆஸ்திரேலிய பவுலர்களிடமிருந்து வெற்றியை பறித்தார்”
“அவரைப் போன்ற வீரர்கள் நாளின் 2, 3, 4வது ஸ்பெல்லில் ஆஸ்திரேலிய பவுலர்களை பெரிய அழுத்தத்திற்குள் தள்ளுவார். அதே சமயம் கடந்த சில வருடங்களாக அசத்தி வரும் கேமரூன் கிரீன் இல்லாதது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக இருக்கும். அதை சமாளிக்க வேண்டுமென்றாலும் ஆஸ்திரேலிய அணியினர் மிட்சேல் மார்ஷை அதிகமாக அதிகமாக தள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறேன்”
இந்தியா போராடுவாங்க:
“எனவே புஜாரா இல்லாதது கண்டிப்பாக இந்திய அணிக்கு பின்னடைவு. அவரைப் போன்ற வீரரை கண்டறியும் வரை இந்திய அணிக்கு பின்னடைவாக இருக்கும். சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சந்தித்த தோல்வியால் இந்திய அணியினர் கொஞ்சம் தடுமாற்றமாக விளையாடலாம். ஆனால் கடந்த முறை இங்கே அவர்கள் விளையாடிய போது முதல் போட்டியிலேயே 36க்கு ஆல் அவுட்டாகியும் தொடரை வெல்ல பார்த்தார்கள்”
இதையும் படிங்க: இந்திய அணியில் அப்படிப்பட்ட தகுதியான வீரர் யாருமில்ல.. கமின்ஸ் கிண்டல் பதில்.. லயன், ஹெட் தேர்வு
“அந்த வகையில் கடந்த காலங்களில் அழுத்தத்தின் கீழ் தள்ளப்பட்ட போது இந்தியா சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். எனவே ஆஸ்திரேலிய அணியினர் தங்களுடைய பலத்துடன் விளையாடினால் முதல் போட்டியிலேயே வெற்றி பார்க்க பார்க்க வேண்டும்” என்று கூறினார். இதை அடுத்து முதல் போட்டி நவம்பர் 22ஆம் தேதி துவங்குவது குறிப்பிடத்தக்கது.



