ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. உலகின் டாப் 2 தரமான அணிகள் மோதும் இந்த தொடருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அதில் நியூசிலாந்துக்கு எதிராக சமீபத்தில் சொந்த மண்ணில் தோற்றதால் ஆஸ்திரேலியாவில் 4 போட்டிகளை வென்று 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
மறுபுறம் கடந்த 2 தொடர்களில் தங்களுடைய சொந்த மண்ணில் தோல்வியை கொடுத்த இந்தியாவை இம்முறை வீழ்த்த ஆஸ்திரேலியா தயாராகியுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியில் விளையாடுவதற்கு பொருத்தமான தகுதியான ஒரு இந்திய வீரர் யார் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கேட்கப்பட்டது. அதற்கு இந்திய அணியில் அப்படி ஒரு வீரர் யாருமே இல்லை என்று ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் கிண்டலாக பதிலளித்தார்.
கமின்ஸ் கிண்டல்:
இது பற்றி அவர் கூறியது பின்வருமாறு. “இல்லை. யாருமில்லை” என்று தயங்காமல் சொன்னார். 2023 உலகக் கோப்பை ஃபைனலுக்கு முன் அகமதாபாத் நகரில் இந்தியாவை தோற்கடித்து இந்திய ரசிகர்களை அமைதியாக்குவோம் என்று சொன்னதை அவர் செய்தார். ஆனால் 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் ஆஸ்திரேலியா இருக்கும் மற்ற 3 அணிகளை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று கமின்ஸ் கூறியிருந்தார்.
கடைசியில் ஆஸ்திரேலியா செமி ஃபைனலுக்கு தகுதி பெறாமல் வெளியேறியதால் அவரை ரசிகர்கள் கிண்டல்டித்தார்கள். இருப்பினும் அதே நிகழ்ச்சியில் நேதன் லயன் பேசியது பின்வருமாறு. “ஸ்மித், லபுஸ்ஷேன் ஆகியோருடன் விராட் கோலியும் இருந்தால் எங்களுடைய டாப் ஆர்டர் வலுவாக இருக்கும்” என்று கூறினார். ஆஸ்திரேலிய வீரர் மிட்சேல் மார்ஷ் தேர்ந்தெடுத்தது பின்வருமாறு.
ஆஸியில் இந்திய வீரர்கள்:
“ரிஷப் பண்ட் 5வது இடத்தில் பேட்டிங் செய்வதற்கு மிகவும் சரியானவர். இளம் வீரரான அவர் இலகுவான இதயம் கொண்டவர். ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் அவர் என்னுடைய கேப்டன்” என்று கூறினார். அதே போல டிராவிஸ் ஹெட் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவை தேர்ந்தெடுத்தது பேசியது பின்வருமாறு. “நான் டாப் ஆர்டரில் ரோஹித் சர்மாவை தேர்ந்தெடுப்பேன். அவருடைய ஆட்டம் அதிரடியாக இருக்கும் அல்லவா?”
இதையும் படிங்க: மிட்சேல் ஜான்சன் மாதிரி.. அசத்தியமான பும்ராவுக்கு எதிரா இதை செய்வது கஷ்டம்.. ஹெட், ஸ்மித் பேட்டி
“இந்த கேள்விக்கு நான் விராட் கோலியை பதிலாக கொடுப்பேன் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். ஆனால் நான் ரோகித் சர்மாவை தேர்ந்தெடுப்பேன்” என்று கூறினார். மேலும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆஸ்திரேலிய அணியில் விளையாடுவதற்கு தகுதியானவர் என்று மற்றொரு வீரர் ஸ்காட் போலண்ட் தெரிவித்தார். அந்த வகையில் தரமான வீரர்கள் நிறைந்துள்ள இவ்விரு அணிகள் மோதும் தொடர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



