டெல்லி கேப்பிட்டல்ஸ் ஐபிஎல் டி20 கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்காக 2 உலகக் கோப்பைகள் 2 சாம்பியன்ஸ் ட்ராபிகளை வென்ற அவர் வரலாற்றின் மகத்தான கேப்டனாக போற்றப்படுகிறார். அப்படிப்பட்ட அவர் 2018இல் டெல்லி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது அந்த அணி ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
சொல்லப்போனால் அவருடைய தலைமையில் தான் வரலாற்றில் முதலும் கடைசியுமாக கடந்த 2020 சீசனில் டெல்லி ஃபைனலுக்கு முன்னேறி அசத்தியது. இருப்பினும் அதன் பின் டெல்லி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கே தடுமாறி வருகிறது. அதனால் அவரிடமிருந்து விலகுவதாக அறிவித்துள்ள டெல்லி நிர்வாகம் புதிய பயிற்சியாளரை விரைவில் தேர்ந்தெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
பாண்டிங் வருத்தம்:
இந்நிலையில் டெல்லி அணியில் இந்திய வீரர் பிரிதிவி ஷா’வுக்கு தம்மால் அதிக வாய்ப்பை கொடுத்து அசத்த வைக்க முடியவில்லை என ரிக்கி பாண்டிங் வருத்தம் தெரிவித்துள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “தனிநபர் வீரர்களை பற்றி பேசுவதை நான் விரும்ப மாட்டேன். ஆனால் பிரிதிவி ஷா ஒவ்வொரு அணியிலும் இருக்கக்கூடிய ஒரு வீரர். தம்மிடம் கொண்டுள்ள திறமைக்கு அவர் பெரும்பாலான அணிகளில் முதல் தேர்வாக இருப்பார்”
“தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்த அவர் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார். இருப்பினும் இந்த வருடம் பாதி சீசனுக்கு மேல் டெல்லி அணியில் அவருக்கான இடத்தை எங்களால் கண்டறிய முடியவில்லை. அவரைப் போன்ற வீரர்களிடமிருந்து சிறந்த செயல்பாடுகளைக் கொண்டு வந்து சிறந்தவர்களாக உருவாக்க முடியாதது ஒரு பயிற்சியாளராக எனக்கு ஏமாற்றத்தை கொடுத்தது”
“அப்படி வீரர்களை சிறந்தவர்களாக மாற்ற முடியவில்லை என்று உணரும் போது நீங்கள் எதிர்பார்க்கக் கூடியவற்றை செய்யும் மற்ற வீரர்களை பார்ப்பீர்கள். பிரிதிவியை சிறந்த கிரிக்கெட்டராக உருவாக்க அவரிடம் நான் நிறைய பேசினேன். இப்போதும் இளம் வீரராக இருக்கும் அவரிடம் திறமை இருக்கிறது. எனவே ஒருநாள் அவருக்கான நேரம் வந்து வேலை செய்து பிரிதிவி ஷா சிறந்த கிரிக்கெட்டராக வருவார் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: 10 வருஷமாகியும் வாழ்வா – சாவா நிலையா? சாம்சனுக்கு எப்போ தான் இதை செய்வீங்க.. முன்னாள் வீரர் ஆதங்கம்
ஆனால் 2018 அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்று சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான பிரிதிவி ஷா ஜாம்பவான் சச்சின், சேவாக், லாரா கலந்த கலவை என பாராட்டும் அளவுக்கு அசத்தினார். இருப்பினும் குறுகிய காலத்திலேயே சொதப்ப துவங்கிய அவரை இந்திய அணி நிர்வாகம் கழற்றி விட்டது. அப்போதிலிருந்து ஐபிஎல் தொடரிலும் ஜாம்பவான் பாண்டிங் பயிற்சியில் கூட பிரிதிவி ஷா அசத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



