எம்எஸ் தோனி மட்டுமே எங்களிடம் உதவியை கேட்காத ஒரே அரிதான கேப்டன்.. ரிக்கி பாண்டிங் பாராட்டு

Ricky Ponting
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்எஸ் தோனி மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். உலகிலேயே 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ள அவரது தலைமையில் இந்தியா 2010ஆம் அந்த நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக முன்னேறியது. 5 ஐபிஎல் கோப்பை, 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும் வென்றுள்ள தோனி வெற்றிகரமான கேப்டனாக சாதனைப் படைத்துள்ளார்.

அந்த வகையில் பல இளம் வீரர்களுக்கும் கேப்டன்களுக்கும் தோனி ரோல் மாடலாக திகழ்கிறார் என்றே சொல்லலாம். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பெரும்பாலான கேப்டன்கள் பெவிலியனில் இருக்கும் தங்களிடம் உதவிகளைக் கேட்பார்கள் என்று பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ஆனால் தோனி மட்டுமே போட்டி நடந்து கொண்டிருக்கும் போது பயிற்சியாளர்களிடம் உதவிகளை கேட்காத அரிதான கேப்டன் என்று அவர் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

அரிதான கேப்டன் தோனி:

ஆஸ்திரேலியாவுக்காக 2 உலகக் கோப்பை, 2 சாம்பியன்ஸ் ட்ராபிகளை வென்ற ரிக்கி பாண்டிங் வரலாற்றின் வெற்றிகரமான கேப்டன்களில் முதன்மையானவராக போற்றப்படுகிறார். அப்படிப்பட்ட அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “களத்தில் இருக்கும் கேப்டன் பெவிலியனில் ஆலோசனை தேடாமல் இருப்பது மிகவும் அரிதானது. ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனி மட்டுமே அதை செய்யாத ஒரே கேப்டனாக இருக்கக்கூடும்”

“ஐபிஎல் 2025 தொடரில் எங்களுடைய முதல் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு நிறைய ஆலோசனைகள் கொடுத்தோம். அவரும் களத்தில் இருந்து கொண்டே நிறைய தருணங்களில் போட்டிக்கு என்ன தேவை? என்று கேள்வி கேட்டார். ஐபிஎல் தொடரில் டைம் அவுட் தண்ணீர் இடைவெளியின் போது நீங்கள் உங்களுடைய கேப்டன் அல்லது சீனியர் வீரர்களிடம் பேசி ஆலோசனைகள் பெறும் வாய்ப்பை பெறுகிறீர்கள்” என்று கூறினார்.

- Advertisement -

பாண்டிங் பாராட்டு:

அவர் கூறுவது போல தோனி ஆரம்பக் காலங்களிலேயே கங்குலி, சச்சின், டிராவிட் போன்ற ஜாம்பவான் வீரர்களுடன் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். அதனால் நிறைய அனுபவங்களைக் கற்றுக்கொண்ட அவர் 2007 முதல் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டிலும் இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டார். அது போக ஐபிஎல், சாம்பியன்ஸ் லீக் போன்ற தனியார் தொடர்களிலும் அவர் கேப்டனாக விளையாடியுள்ளார்.

இதையும் படிங்க: நெருங்க முடியாத உயரத்தில் கிங் கோலி.. ஆசியக் கோப்பை டி20 வரலாற்றில் டாப் 3 ரன்ஸ் அடித்தவர்களின் பட்டியல்

அதனால் ஏராளமான அனுபவத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் தோனி பெரும்பாலும் பயிற்சியாளர்களிடம் ஆலோசனைகளை கேட்பதில்லை. அனைத்து முடிவுகளையும் அவர் தன்னுடைய சொந்த வழியிலேயே எடுப்பார். அத்துடன் ருதுராஜ் போன்ற அடுத்த தலைமுறை வீரர்களுக்கு தோனி ஆலோசனை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement