பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. அதனால் 1 – 0* (5) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா சமீபத்தில் நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியிலிருந்து கம்பேக் கொடுத்தது. மேலும் தோல்வியை சந்திக்கும் என்று கணித்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் ரோகித் இல்லாமலேயே பும்ரா தலைமையில் இந்தியா பதிலடி கொடுத்தது.
இந்நிலையில் ரோஹித், ஷமி, கில் ஆகியோர் இல்லாமலேயே முதல் போட்டியில் பெற்றது இந்தியாவின் மகத்தான வெற்றி என்று ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார். அதே சமயம் 3 – 1 (5) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும் என்று தாம் ஏற்கனவே வெளியிட்ட கணிப்பை இப்போது மாற்றவில்லை என்று பாண்டிங் மீண்டும் சவால் விட்டுள்ளார். இது பற்றி அவர் க்ரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு.
மகத்தான வெற்றி:
“அது இந்தியாவின் ஒரு மகத்தான டெஸ்ட் வெற்றிகளில் ஒன்றாக இருக்க வேண்டும். ஏனெனில் ரோஹித், கில், ஷமி ஆகியோர் அணியில் இல்லை. 150க்கு ஆல் அவுட்டான பின்பும் அவர்கள் பெற்ற இந்த வெற்றி ஆச்சரியமாக இருந்தது. அதிலும் சுமார் 300 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது அற்புதமான கம்பேக். முதல் இன்னிங்ஸில் பும்ரா அற்புதமாக துவங்கினார் என்பதில் சந்தேகம் இல்லை”
“ஷமி இல்லாத சூழ்நிலையில் கேப்டனாக அவர் முன்னின்று தம்முடைய அணியை வழி நடத்தினார். கேப்டனாகவும் பவுலராகவும் அவர் சிறந்த செயல்பாடு வெளிப்படுத்தினார். அதே போல இரண்டாவது இன்னிங்ஸில் விராட் கோலி மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் அடித்த சதங்கள் வெற்றிக்கு அடித்தளத்தை அமைத்தது. ஆனால் அவை அனைத்தும் முதல் நாள் மாலையில் இந்தியாவின் பவுலிங் ஒன்றாக இணைந்து அட்டாக் செய்தது முக்கியமானதாக அமைந்தது”
இப்போதும் சவால்:
“முதல் நாளின் இரண்டாவது பகுதியில் தான் போட்டி மொத்தமாக மாறியது. இப்போதெல்லாம் தங்களுடைய சொந்த மண்ணை விட வெளிநாட்டு மண்ணில் இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடுகிறார்கள் என்பதை நான் உறுதியாக கூறுவேன். இப்போதெல்லாம் அவர்கள் ஸ்பின்னர்களை விட வேகப்பந்து வீச்சாளர்களை நன்றாக விளையாடுகிறார்கள்”
இதையும் படிங்க: 32 செ.மீ.. ஜெப் தாம்சன், வாசிம் அக்ரம் மாதிரி பும்ரா டெர்மினேட்டர்.. இதுக்கு கோச்சிங்கே இல்ல.. விளக்கிய மார்ட்டின்
“அதே சமயம் இப்போதும் என்னுடைய கண்ணோட்டத்தை நான் மாற்றிக் கொள்ளவில்லை. இந்தியா முதல் போட்டியில் வென்றார்கள். 3 – 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும் என்று நான் ஆரம்பத்தில் சொன்னேன். இந்தப் பெரிய தொடரில் இப்போதும் நான் அதில் நிற்கிறேன். ஆனால் ஆஸ்திரேலியா வெல்வதற்கு நிறைய கடின வேலைகளை செய்ய வேண்டும்” என்று கூறினார்.