32 செ.மீ.. ஜெப் தாம்சன், வாசிம் அக்ரம் மாதிரி பும்ரா டெர்மினேட்டர்.. இதுக்கு கோச்சிங்கே இல்ல.. விளக்கிய மார்ட்டின்

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* (5) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் கேப்டனாக விளையாடிய பும்ரா 8 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றினார். அப்படி தொடர்ந்து அசத்தி வரும் அவர் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராக முன்னேறி சாதனையும் படித்துள்ளார்.

இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா ஏன் எதிர்கொள்வதற்கு மிகவும் கடினமாக இருக்கிறார் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் டேமின் மார்ட்டின் டெர்மினேட்டர் என்ற தலைப்பில் சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையில் விளக்கியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பும்ரா எப்போதும் பேட்ஸ்மேனை பின் தொடர்ந்து அடுத்த நகர்வை திட்டமிடுகிறார். அவருடைய ரன்-அப் நாங்கள் பொதுவாக கற்றுக் கொடுப்பதற்கு எதிராக இருக்கிறது”

- Advertisement -

தனித்துவ பும்ரா:

“பொதுவாக உங்களுடைய 60% வேகம் நீங்கள் ஓடி வருவதிலிருந்து வரும். மற்றவை வெள்ளைக்கோட்டில் கிடைக்கும். அது ரயில் போல வேகமாக இலக்கை நோக்கி ஓடிவந்து பின்னர் 40% வேகத்தை உங்களுடைய ஆக்சன் வைத்து கிடைக்கும். ஆனால் பும்ரா 30% வேகத்தை ஓடி வருவதில் பெருகிறார். 70% வேகத்தை தன்னுடைய ஆக்சனிலிருந்து பெறுகிறார் என்று நினைக்கிறேன்”

“பிரட் லீ, வக்கார் யூனிஸ், சோயப் அக்தர் ஆகியோர் உங்களை நோக்கி பாய்ந்து வருவதை நீங்கள் எதிர்கொள்ளும் போது ஏதோ ஒரு உள்ளார்ந்த நிலையில் நீங்கள் தயாராக இருப்பீர்கள். ஆனால் வாசிம் அக்ரம், ஜெப் தாம்சன் அல்லது பும்ரா ஆகியோரை நீங்கள் எதிர்கொள்ளும் போது அப்படி தயாராக இருக்க முடியாது. ஏனெனில் அவர்கள் மிகவும் குறைந்த தூரமே ஓடி வருவார்கள்”

- Advertisement -

டெர்மினேட்டர் பும்ரா:

“பும்ரா இங்கே ஒரு ஒளியியல் மாயை உருவாக்குகிறார். நான் பார்த்ததில் அவருடைய நிலை நீட்டிப்பு மிகவும் கடுமையானது. அந்த மிகை நீட்டிப்பு என்பது பந்தை எறிவதிலிருந்து வேறுபட்டது. ஏனெனில் அது ஒரு தன்னிச்சையான செயல். அதற்கு உங்களால் பயிற்சியளிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. நான் முதலில் அவருடைய பவுலிங் பார்த்தபோது ஆச்சரியப்பட்டேன்”

இதையும் படிங்க: 6, 0, 6, 6, 4, 6.. தொடரும் பாண்டியாவின் அதிரடி.. 2025 ஐபிஎல் வாங்கப்படாத தாக்கூர் மோசமான சாதனை

“பெரும்பாலான பவுலர்கள் 6 – 7 செ.மீ வெள்ளைக்கோட்டுக்கு முன்பாக பந்தை ரிலீஸ் செய்வார்கள். பட் கமின்ஸ் சுமார் 20 செ.மீ விடுவார். அதுவே பும்ராவுக்கு 32 செ.மீ குறைவாக உள்ளது. கடைசி விளைவு அவருடைய மணிக்கட்டில் இருக்கிறது. இப்படி அவர் பந்து வீசும் போது மெதுவாக வரும் என்று நீங்கள் காத்திருப்பீர்கள். ஆனால் திடீரென அது உங்களை நோக்கி வேகமாக வரும். மேலும் அவருடைய மணிக்கட்டு காரணமாக என்ன பந்து வீசுகிறார் என்பதை அறிந்து நீங்கள் தாமதமாகவே முடிவு எடுக்க முடியும்” என்று கூறினார்.

Advertisement