ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் 2025 – 26 நவம்பர் 23ஆம் தேதி துவங்கியது. வரலாற்றில் கடைசியாக 2010/11 ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலிய மண்ணில் வென்று இங்கிலாந்து சாதனை படைத்தது. ஆனால் அதன் பின் ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட பெற முடியாமல் இங்கிலாந்து திண்டாடி வருகிறது.
அதனால் இம்முறையும் இங்கிலாந்தை தோற்கடித்து ஆஸ்திரேலியா வெல்லும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் இம்முறை பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து அணி பாஸ்பால் என்ற பெயரில் அதிரடியாக விளையாடும் அணுகுமுறையை பின்பற்ற உள்ளது. அதனால் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இங்கிலாந்து கோப்பையை வெல்லும் என்பது ஆங்கிலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ஆஷஸ்க்காக உருவாக்கப்பட்ட பஸ்பால்:
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதற்காக மட்டுமே ப்ரெண்டன் மெக்கல்லமை வைத்து இங்கிலாந்து பஸ்பால் அணுகு முறையை உருவாக்கியுள்ளதாக ரிக்கி பாண்டிங் வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் பாண்டிங் பேசியது பின்வருமாறு. “இந்த ஆஷஸ் தொடருக்காகவே அவர்கள் 2 வருடங்களாக ஒன்றாக இணைந்து அணியாக கட்டமைத்து வந்துள்ளார்கள்”
“எனக்குத் தெரிந்த வரை பஸ்பால் என்பதற்கு ப்ரெண்டன் மெக்கல்லம் நல்ல காரணமாக இருப்பார். அது இந்த ஒரே ஒரு தொடருக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டது. 2019 உலகக் கோப்பையிலும் அவர்கள் இதையே செய்தார்கள். இயன் மோர்கன் தலைமையில் 2 வருடத்திற்கு முன்பே அவர்கள் குறிப்பிட்ட வீரர்களை கண்டறிந்து அதிரடியாக விளையாடத் துவங்கினர். கடந்த 2 வருடங்களாக என்ன நடந்தது என்பதை மறந்து விடுங்கள். இவை அனைத்தும் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டிகளை வெல்வதற்காக ஒரே அணியாக சேர்ந்து ஒரே மாதிரியாக ஒன்றாக நிற்பதைப் பற்றியதாகும்”
பாண்டிங் கருத்து:
“கடந்த 25 வருடங்களில் அவர்கள் ஆஸ்திரேலியாவில் 4 முறை மட்டுமே வென்றுள்ளார்கள். இம்முறை வெற்றி பெறுவதற்கு அவர்கள் குறைந்தது 3 போட்டிகளில் வெல்ல வேண்டும். எனவே இம்முறை அவர்கள் எப்படி ஆஸ்திரேலியாவில் விளையாடப் போகிறார்கள் என்பதை பார்க்க என்னால் காத்திருக்க முடியவில்லை. அவர்கள் மாறுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் எப்படி விளையாடுவார்கள் என்பதை கடந்த 2 வருடங்களாக நான் போதுமானளவு பார்த்து விட்டேன்”
இதையும் படிங்க: வெறும் 95க்கு அவுட்.. இலங்கையை தெறிக்க விட்ட ஜிம்பாப்வே.. மிகப்பெரிய வரலாற்று சாதனை வெற்றி
“இம்முறையும் அவர்கள் அதே வழியில் விளையாடப் போகிறார்கள். பென் டக்கெட் – ஜாக் கிராவ்லி ஆகியோர் எப்போதும் போல அதிரடியாக விளையாடுவார்கள். எனவே இங்கிலாந்து டாஸ் வென்றால் முதலில் பவுலிங் செய்து 4வது இன்னிங்ஸில் எதிரணி அடிக்கும் ரன்களை விட அதிகம் அடிக்கப் பார்ப்பார்கள். எனவே ஆஸ்திரேலியா அவர்களுக்கு எதிராக வித்தியாசமான ஃபீல்டுகளை அவர்களுடைய ஈகோவுடன் விளையாட வேண்டும்” என்று கூறினார்.



