இங்கிலாந்து கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 – 2 (5) என்ற கணக்கில் சமன் செய்தது. விராட், ரோஹித் போன்ற சீனியர்கள் இல்லாததால் அத்தொடரில் இளம் இந்திய அணியை இங்கிலாந்து எளிதாக தோற்கடிக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் சுப்மன் கில் தலைமையில் கடுமையாக போராடிய இந்திய அணி தொடரை சமன் செய்தது.
இதைத் தொடர்ந்து வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இங்கிலாந்து அங்கு வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் களமிறங்குகிறது. 2011க்குப்பின் ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்லாத இங்கிலாந்து வெறும் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெல்ல முடியாமல் திண்டாடி வருகிறது. ஆனால் இம்முறை பஸ்பால் அணுகு முறையில் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் அதிரடியாக விளையாடும் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பஸ்பால் பலிக்காது:
இந்நிலையில் பஸ்பால் அணுகுமுறையைப் பயன்படுத்தி ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் கோப்பையை வெல்லலாம் என்ற இங்கிலாந்தின் கனவு பலிக்காது என்று அந்நாட்டின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ஏனெனில் பஸ்பால் அணுகுமுறை ஃபிளாட்டான பிட்ச்களைக் கொண்ட இங்கிலாந்தில் மட்டுமே செல்லுபடியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“நாங்கள் எப்படி பிட்ச்களை தயாரிக்கிறோம் என்பதைப் பார்ப்பது சுவாரசியமாக இருக்கும். பொதுவாக ஆஸ்திரேலிய அணி பிட்ச் தயாரிப்பு பற்றி மைதானப் பராமரிப்பாளர்களிடம் எதுவும் சொல்ல மாட்டார்கள். எங்களுடைய காலத்தில் நாங்கள் அதைப் பற்றி பேச மாட்டோம். ஆனால் எங்களுடைய நாட்டில் எப்போதும் நல்ல பிட்ச்களை உருவாக்குவார்கள். அது எப்படி இருக்க வேண்டும் என்று இங்கிலாந்து விரும்புகிறது என்பது எனக்குத் தெரியவில்லை”
பாண்டிங் வெளிப்படை:
“ஆனால் பிட்ச் ஃபிளாட்டாக இருக்கும் போது அவர்கள் தங்களுடைய சிறந்த கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள். சொல்லப்போனால் அவர்களுடைய அதிரடியான பேட்டிங்கிற்கு ஃபிளாட்டான பிட்ச் தேவைப்படுகிறது. ஆனால் ஆஸ்திரேலியாவில் இருக்கும் பிட்ச்கள் கொஞ்சம் பவுலிங் செய்வதற்கு சாதகமாக இருக்கும். ஒரு ஆஸ்திரேலியராக நான் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடுவதை விரும்புகிறேன்”
இதையும் படிங்க: அங்க பாண்டியா மாதிரி பிளேயர் இல்லாதது இந்தியாவுக்கு இழப்பு தான்.. கில் முன்னேறுவாரு.. கிரைக் மெக்மிலன்
“ஆஸ்திரேலியா அணியும் ஆக்ரோசமாக விளையாடுவதற்கு முயற்சிக்கும். அதுவே அவர்களுடைய இயற்கையான வழியாக இருக்கிறது. அவர்கள் இங்கிலாந்து பவுலர்கள் மீது அழுத்தத்தை திருப்பி போட முயற்சிக்க வேண்டும். ஃபீல்டிங் துறை வெற்றிக்கான சாவியாக இருக்கும். டாப் ஆர்டரில் ஆஸ்திரேலியா சிறப்பாக பேட்டிங் செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு இந்த ஆஷஸ் தொடரையும் வெல்வதற்கு நல்ல வாய்ப்பிருக்கிறது” என்று கூறினார்.



