முடி தூக்குது பாருங்க.. அந்த வரலாறு கொண்ட என்கிட்டயே மோதுறீங்களா? கம்பீருக்கு பாண்டிங் பதிலடி

Ricky Ponting 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த 5 வருடங்களில் 3 டெஸ்ட் சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். அவருடைய சுமாரான ஆட்டம் சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா தோல்வியை சந்திக்க முக்கிய காரணமானது. அதன் காரணமாக அடுத்த நடைபெறும் ஆஸ்திரேலிய தொடரில் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற இந்தியா 4 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அந்த சூழ்நிலையில் உலகத்தரம் வாய்ந்த வீரரான விராட் கோலியின் ஃபார்ம் கவலையை கொடுப்பதாக முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் சமீபத்தில் தெரிவித்திருந்தார். 5 வருடத்தில் 3 சதங்கள் என்பது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வீரருக்கு உகந்ததாக இல்லை என்றும் அவர் கூறியிருந்தார். எனவே விராட் கோலி ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தார்

- Advertisement -

கம்பீர் பதிலடி:

அது பற்றிய செய்தியாளர்கள் கேட்ட போது இந்திய அணியை பற்றி பேசுவதற்கு ரிக்கி பாண்டிங் யார்? என்று பயிற்சியளர் கௌதம் கம்பீர் அதிரடியான பதிலடி கொடுத்தார். மேலும் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவில் அசத்துவார்கள் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் கௌதம் கம்பீருக்கு தம்முடைய ஸ்டைலில் ரிக்கி பாண்டிங் பதிலடி கொடுத்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட், ரோஹித் ஆகியோரை பற்றி ஜோடியாக நான் குறிப்பிட்டுள்ளேனா என்பது தெரியவில்லை. ஆனால் அதற்காக கம்பீர் என்னை ஆழமான முடிவில் வீசுகிறார் என்று எண்ணுகிறேன். முந்தைய நாளில் நான் விராட் கோலியின் தற்போதைய ஃபார்ம் கவலையை கொடுப்பதாக நான் கூறியிருந்தேன். அதற்கு முந்தைய நாள் கடந்த 5 வருடங்களில் விராட் கோலி வெளிப்படுத்திய செயல்பாடுகளை பற்றி படித்தேன்”

- Advertisement -

பாண்டிங் பதிலடி:

“எனவே அதை மிகவும் தெளிவுடன் சொன்னேன். அவர் கடந்த 5 வருடங்களில் 2 சதங்கள் (உண்மையில் 3) மட்டுமே அடித்துள்ளார் என்று நினைக்கிறேன். இந்தியாவில் அவருடைய சராசரி 90லிருந்து 30 என்றளவில் குறைந்துள்ளது. எனவே அது கவலைக்குரிய விஷயம் என்று கூறினேன். இதைப் பற்றி விராட் கோலியிடம் கேட்டால் அவரும் கவலைக்குரியது என்று தான் சொல்வார்”

இதையும் படிங்க: ராபின் உத்தப்பா சொன்ன வார்த்தையை உண்மையாக்கி காட்டிய அபிஷேக் சர்மா – இவர் கண்டிப்பா சூப்பர் பிளேயர் தான்

“ஆனால் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடுவதை விரும்பும் விராட் கோலி இங்கே நல்ல சாதனைகளை வைத்துள்ளார். எனவே அவர் ஃபார்முக்கு திரும்ப இதுவே நல்ல வாய்ப்பு என்று நான் கூறியிருந்தேன். ஆனால் கம்பீர் நான் சொன்ன கருத்தின் இரண்டாவது பகுதியை பற்றி பேசவில்லை. நியூஸிலாந்திடம் சந்தித்த தோல்விக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவருடைய பின் கழுத்தில் ஏற்கனவே முடிகள் தூக்கிக் கொண்டுள்ளன. அப்படி அதிரடியாக பேசுவதில் எங்களுக்கும் கொஞ்சம் வரலாறு இருக்கிறது. ஆனால் நான் கம்பீர் இந்த வாய்ப்பை எடுத்துக்கொண்டு என் மீது நெருப்பை வீசியுள்ளார்” என்று கூறினார்.

Advertisement