இந்திய வீரர்களை நம்பி ஏமாந்த சோகத்தில் ரிக்கி பாண்டிங். 3 பேர் கொடுத்த ஏமாற்றம் – விவரம் இதோ

Ponting

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல் ஆகிய அணிகளுக்கிடையே முதல் குவாலிபயர் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது தனக்குத்தானே குழி வெட்டிக் கொண்டது என்றுதான் கூறவேண்டும். முதலில் ஆடிய மும்பை அணி அபாரமாக விளையாடி 20 ஓவர்களில் 200 ரன்கள் குவித்தது.

dcvsmi

அந்த அணியின் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் அரைசதம் அடிக்க ஹர்திக் பாண்டியா 14 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். அதன் பின்னர் ஆடிய டெல்லி அணியால் மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை தாக்குப்பிடிக்க முடியவில்லை. அந்த அணியின் 3 இந்திய வீரர்கள் மோசமான வகையில் ஆடி டக் அவுட் ஆகினர்.

துவக்க வீரர்களான ஷிகர் தவான் மற்றும் பிரித்திவ் ஷா வெறும் இரண்டு பந்துகள் பிடித்து டக் அவுட் ஆகி வெளியேறிவிட்டனர். அதனை எடுத்து வந்து அஜின்கியா ரகானே 3 பந்துகள் மட்டுமே பிடித்து டக் அவுட் ஆகி மைதானத்திற்கு வெளியே சென்றுவிட்டார். குறிப்பாக டெல்லி அணி பெரும்பாலும் இந்திய வீரர்களை மட்டுமே நம்பி ஆடும் அணி.

pandya 1

அந்த அணியில் ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த், அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஷ்வின் என இன்னும் பல இந்திய வீரர்கள் இருக்கின்றநர். பேட்டிங்கை பொறுத்தவரையில் இந்த மூவர் தான். இந்த மூவரை நம்பித்தான் ரிக்கி பாண்டிங் மொத்த பேட்டிங்கையும் விட்டிருந்தார்.

- Advertisement -

dhawan 1

ஆனால் இந்த மூவருமே ஜீரோ ரன்களுக்கு அவுட் ஆனது ரிக்கி பாண்டிங்கிற்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. இதன் காரணமாக இந்த போட்டியில் மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெரிதும் நம்பிய இந்திய வீரர்களை கைவிட்டு விட்டதால் சோகத்தில் இருக்கிறார் டெல்லி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்.